உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


________________

37 தென்னாட்டிற்கு 100க்கு 3, 4 பேர் அளவில் கெளசிகர் - விசுவாமித்திரர் கோத்திரம் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களாயினும் ஆண்கள் மட்டுமே வந்ததால், தென்னாட்டில் வாழும் திராவிட இனப் பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி மக்களைப் பெற்று வாழ்ந்தனர். அவர் வரலாற்றுப் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் “ஆரியர்க்கு முற்பட்ட தமிழர் நாகரிகம்” (Pre Ariyan Tamil Culture) என்னும் ஒரு நூலையும், தமிழர் வரலாறு (History of the Tamils) என்னும் மற்றொரு நூலையும் ஆங்கிலத்திலே எழுதியிருக்கிறார். அதிலே குறிப்பிடுகிறார்: கோதாவரி நதிக்கரையில் விசுவாமித்திரர்' கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், 500க்கு மேற்பட்டவர்கள் வடக்கிலிருந்து வந்து அங்கே தங்கினார்கள் கி.மு. 400, அல்லது 500இல். அங்கே தங்கிய ஆரிய விசுவாமித்திர கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த பெண்களைத்தான் மணக்க நேரிட்டது; மணந்து மக்களைப் பெற்றார்கள்; கோத்திரம் வளர்ந்தது; அப்படி வளர்ந்த கோத்திரத்திற்குத்தான் "பிரம்மராட்சச கோத்திரம்" என்று பெயர். அரக்கரும், பிராமணரும் சேர்ந்து உருவான கோத்திரம் என்பதால் பிரம்மராட்சச கோத்திரம் என்று பெயர் பெற்றது என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் ஆதாரத்தோடு எழுதியிருக்கிறார். அவ்வாறு மூலத்திலேயே கலந்தபோதும், அப்படி இனத்தைப் பாதுகாத்தல்தான் வேத மிரிதிகளுடைய ஒரே நோக்கம் என்றும், அப்போதுதான் பிறவியினால் தகுதி பெற்ற பிராமணர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, வேதகாலச் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்றும் அந்தச் சங்கத்திலே பிராமணர்கள் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். அந்தச் சங்கத்தைச் சேர்ந்த இருவர் 1