உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


________________

4 38 கும்பகோணத்திலிருந்து வெளியிட்டிருந்த பிரசுரம் ஒன்றில், வருணாசிரம தரும விதிகளின்படி, பிராமணன்தான் தகுதி பெற்ற தலைவன்; அதனால் அவன் ஒருவனுக்குத்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டும் தகுதி இருக்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆம், எப்படிப்பட்ட இனக்கலப்புக்குத் தலைமுறை பலவாக ஆளாகி இருப்பினும், ஏதோ பிராமணர்களின் சாதி தூயதாக, கலப்பின்றிக் காக்கப்பட்டது போல் ஒரு மாயையினை உருவாக்கி, அதனால் அவர்கட்கே பிற வகுப்பாருக்கெல்லாம் வழிகாட்டும் எசமான உரிமை இருப்பதாகக் கூறுவது, எப்படிப்பட்ட ஆணவம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். முடிவு திருவரங்கத்திலிருந்து வந்த ஒரு பிரசுரம் பிராமணர்கள் அல்லாதாரும் ஆரியர்களே என்று கூறிப் பிரச்சினைக்கு காண முயன்றுள்ளது. இது இந்த நாட்டிலே நீண்ட காலமாக நடைபெறுகிறது. ஆரியப் பெருமை பேச வாய்ப்புக் கிடைத்தால் ஆரியன் தனி இனம்; இல்லை என்றால் எல்லாரும் ஓரினம், ஆரியர் திராவிடர் என்பது எல்லாம் கற்பனை, எவரையும் இனம் பிரித்துக் காட்ட முடியாது என்று நிலைமைக்கேற்பப் பேசுதல் அவர்தம் முறை. அந்த முறையிலே பிராமணனுடைய தனித் தன்மையைக் காப்பாற்றுவது ஒரு நோக்கம்; வேதசாத்திரங்களை அவர்கள்தான் படித்துப் பாராயணம் செய்து காப்பாற்ற முடியும் என்பதால், அதற்காக அந்தச் சாதியைக் கலப்பின்றிக் காப்பாற்ற வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம். இன்னொரு பக்கம் இந்தியாவிலே இருக்கிற எல்லாருமே ஆரியர்கள்தான் என்று ஒரு வாதம். இந்த இரட்டை வேடம் ஏன்? திராவிடர் என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு ஒரு நாகரிகம் இருந்தால், அது நால் வருணத்தை ஏற்காத ஒரு தனித்தன்மை உடையதாக ஆகிவிடுமே என்பதற்காக எல்லோருமே ஆரியர் என்று ஒரு சாகசப் பேச்சு.