62
________________
62 நான் (பிராமணன் ஆணையிட்டால் தெய்வம் அதை நிறைவேற்றும் என்பது மற்றொன்று. இது ஆரியக் கொள்கை. மந்திரங்களுக்குத் தெய்வங்கள் கட்டுப்பட்டவை. பிராமணர்களுக்கு மந்திரங்கள் கட்டுப்பட்டவை என்பதால் பிராமணர்கட்குத் தம்மைப்பற்றி ஓர் உயர்வு மனப்பான்மை. அதனால் இயல்பாகவே அவர்கள் எசமான உணர்வு பெற்றார்கள். நம்மை அறியாமலே நம்மால் ஆவது ஒன்றும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்னும் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு நம்முடைய உண்மையான இறைப்பற்று நம்மை ஆளாக்கி வைத்திருக்கிறது. அடக்கமுடையானாய் அடியாருக்கு அடியவன் யான் என்றால், அது நம்மை நம்நிலையிலே தாழ்த்தி வைக்கிறது. நாம் அடியாருக்கு அடியாராகக் கூட இருக்கலாம் ஆதிக்க வாதியாக எவரும் இல்லாவிடில்! ஆனால், ஆதிக்கம் செலுத்துகிறவன் அப்படித் தன்னை வல்லவனாக எண்ணுகிறபோது அவனுடைய ஆதிக்கமே வளர்ந்தோங்கி நிலை பெறுகிறது. ஆதி சங்கராச்சாரியார் ஒரு பெரிய ஞானி என்று கருதப்பட்டவர்; வேதாந்தக் கொள்கைக்கு இந்த நாட்டிலே ஒரு சிறப்பான இடத்தைத் தேடித் தந்தவர். விவேகானந்தருக்குக் கூட அதே வேதாந்தக் கொள்கைதான். அமெரிக்காவிற்குச் சென்று சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் எடுத்துரைத்து அதற்கு ஒரு பெருமை தேடித் தந்தவர் விவேகானந்தர். விவேகானந்தர் தொடக்கத்திலே நாத்திகராக இருந்து, இராமகிருட்டிண பரம் அம்சரிடத்திலே சீடரான போது அந்த உணர்வு மாறி, இறை என்ற பரம்பொருள் உண்மை என ஏற்றுக் கொண்டவர். ஆதிசங்கரர் பற்றி அவர் சொல்கிறார், ‘ஆதி சங்கரரின் அறிவு வாள் முனை போன்று கூர்மையானது. அவர் ஆற்றல் மிக்க சிந்தனையாளர்,