உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


________________

64 சங்கரர் வேதங்களுக்கு எதிராகத் தமது புத்திசாலித் தனத்தைக் காட்ட வேண்டியதில்லை. இந்த வாதத்திலே தோற்ற பல புத்தபிட்சுகளை நெருப்புக்கு இரையாக்கியவரை என்னவென்று சொல்வது? இதயம் இல்லாதவர் என்று சொல்வதா? புத்த பிட்சுகள் தங்கள் வாதத்தில் தோற்றபோது நெருப்பிலே போடப்பட்டதாகச் செய்தி கூறப்பட்டுள்ளது. சங்கரரின் இந்த இரக்கமற்ற செய்கையை என்னவென்று சொல்வது? ஆனால், புத்தரின் இதயத்தைப் பார், ஓர் ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றத் தமது உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த அவரது விவேகத்தைப் பார். புத்தர் அவரது கொள்கையான "பகுஜன உறிதாய, பகுஜன ஸூகாய" என்பதன் மூலமாகப் பலருடைய நன்மைக்காகவும், பலருடைய மகிழ்ச்சிக்காகவும்தான் (மனிதன்) வாழவேண்டும் என்பது எவ்வளவு மகத்தானது. "எவ்வளவு பரந்த இதயம்! என்ன கருணை!" விவேகானந்தர் ஏன் இவ்வாறு விளக்குகிறார் என்றால், வைதிகப் பிராமணீயம் சமுதாயத்தை அழித்துவிட்டது என்பதனால்தான். மனித நேயத்தை அழித்துவிட்ட வைதிகக் கொடுமையைப் பல்வேறு ங்களில் விவேகானந்தர் கண்டித்திருக்கிறார். அவரது உரைகள் எல்லாம் புத்தகங்களாக இராமகிருட்டிணர் மடத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. வாய்ப்பு உள்ளவர்கள் ஓய்வு நேரத்திலே படித்தால் அவை சிந்தனைக்குத் தெளிவு தரும். சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் என்ற அறிஞரால் வகுப்புவாரி உரிமை அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 1921வது ஆண்டிலேயிருந்து