உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


________________

67 அவரிடம் ஏஜெண்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிராமணர்கள் எல்லாம் கோபுர உச்சியில் மேலே ஏறி நின்று குடமுழுக்கு கண்டனர். தியாகராயரை மேலே வாராதவாறு ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். அவரோ பெரிய பக்தர், என்னடா இது! நம்மையும் மேலே கூப்பிடுவார்கள் என்று நினைத்தால், ஓரமாக உட்கார வைத்து விட்டார்களே? என்று ஏஜெண்டைக் கூப்பிட்டுக் கேட்டார். "தாங்கள் மேலே வந்தால் தீட்டாகிவிடும்; தோசம் ஏற்படும்" என்று பதில் கிடைத்தது. எத்தனையோ பெருமைகளுக்கு உரியவரான தியாகராயருக்கே இந்த நிலை. திராவிட இனத்தின் நிலை பற்றி எண்ணிப் பார்ப்பவர்கட்கு இது போதாதா? அக்காலத்தில் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சார்பாகச் சேரன்மாதேவியிலே ஏழைப் பிள்ளைகளுக்குக் குருகுலம் அமைத்தார்கள். அந்தக் குருகுலத்திலே ஏழை மாணவர்கட்கு உணவும், உறைவிடமும், கல்வியும் வழங்கப்பட்டன. அதை நடத்தும் பொறுப்பு வகித்தவர் வ.வே.சு.அய்யர். அப்போது காங்கிரசு கட்சியின் பொருளாளராக இருந்தவர் வரதராசுலு நாயுடு. காங்கிரசு கட்சி ரூபாய் 5000 நிதி உதவி கொடுத்தது. பெரியார் ஈ.வெ.ரா. அங்கே சென்று பார்த்தபோது பிராமணப் பிள்ளைகளுக்கு மட்டும் முதலில் தனிப் பந்தி. மற்ற பிள்ளைகளுக்குப் பின்னர் தனிப் பந்தி என்ற) முறை செயல்பட்டது. அதை எண்ணிப் பார்த்த பெரியார் வ.வே.சு. அய்யரைப் பார்த்து "காங்கிரசு பணம் பொது மக்கள் பணம். அதைக் கொண்டு நடக்கும் குருகுலத்தில் சாதி முறையில் பிரிக்கிறீர்களே; மாணவர்களை வெவ்வேறு பந்தியில் சாப்பிடச் சொல்வது நியாயமாகுமா?” என்று கேட்டார். வ.வே.சு. அய்யர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அப்படிப்பட்ட அறிஞர் "ஐதீக முறைப்படித்தான் குருகுலம் நடைபெறுகிறது; அந்த