உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


________________

69 காங்கிரசு தலைவர்கள் பலரும் சென்றனர். அங்கே பிராமணர்களுக்குப் பந்தி போட்ட இடத்திலே இருந்து 300 மீட்டருக்கு அப்பால் பிராமணர் அல்லாதாருக்குப் பந்தி போட்டிருந்தார்கள். சுதந்திரம் கேட்ட கட்சியிலேயே இந்தப் பந்தி வேறுபாடு நடைமுறையில் இருந்தது. இவைகளின் விளைவாக டாக்டர் நடேசனார் முயற்சியால் இணைக்கப்பட்ட தியாகராயரும், நாயரும் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தனர். அந்தக் கட்சியிலே இளைஞர்களாகச் சேர்ந்தவர்கள்தான் டாக்டர் ஏ. இராமசாமி, முதலியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், சர் ஏ.டி. பன்னீர்ச்செல்வம், தமிழவேள் பி.டி. இராசன், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியன் முதலானோர். அந்த நிலையிலேதான் காங்கிரசின் வழிகாட்டியான காந்தி அடிகளை மிகவும் மதித்தவரான பெரியார் ஈ.வே.ரா. காங்கிரசில் இருந்து வெளியேறி, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்தார். அவர் தொடங்கிய குடியரசு இதழில் இரண்டு ஆண்டுகள் வரையில் ஒரு பக்கம் காந்தியார் படமும், இன்னொரு பக்கம் கைராட்டினப் படமும் இடம் பெற்றிருந்தன. ஆனால் காந்தி அடிகள் தலைமையில் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்து வந்த காங்கிரசு கட்சி பிராமணர்கள் ஆதிக்கம் பெற ஒரு கருவியாகப் பயன்படுகின்ற அளவுக்கு நாட்டு மக்களிடம் ஒரு பெரிய செல்வாக்கு பெற்றிருந்தது. ஆகவே, பார்ப்பனீய வைதிகப் புரோகிதச் செல்வாக்கை ஒழிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்பட்டாலொழிய, எதிர்காலத்தில் தமிழர்கள் உரிமை வாழ்வு அடையமுடியாது என்று பெரியார் கருதினார். எனவேதான், குடியரசு ஏட்டினைத் தொடங்கிச் சுயமரியாதைக் கொள்கையை மக்களிடம் பரப்ப முனைந்தார். என்ன அந்தக் கொள்கை? மனிதனுக்கு உயிரினும் மானம் பெரிது, பிறவியில் எல்லோரும் சமம், யாரும்