71
________________
71 அறிஞர் அண்ணா பெரியாரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார் என்பதைச் சிலர், ஏதோ அரசியலில் பகை உணர்ச்சி கொண்டுதான் விலகினார் என்று நினைக்கிறார்கள். அவருக்கு அப்படிப்பட்ட மாறுபாடு கிடையாது. பெரியார் எவ்வளவு தன்னலமில்லாத தலைவரோ, அந்த அளவுக்குத் தன்னலமற்ற தலைவர்தான் அறிஞர் அண்ணா. இயக்கத்தை நடத்தும் முறையில் தமது கொள்கையில் மற்றவர்கள் அவ்வளவு உறுதியாக இருக்க மாட்டார்கள் என்பது பெரியாரின் எண்ணம். தமது கொள்கையிலும் அதைப் பரப்புவதிலும் பெரியார் கொண்டிருந்த உறுதியால், அதை எவரேனும் மாற்றிடக் கேட்டால், "நான் சொல்வதைக் கேட்டால் கேளு, இல்லாவிட்டால் செல்" என்பார். அண்ணா அப்படிச் சொல்ல மாட்டார். தாம் கொண்ட கருத்து மட்டுமே முக்கியம் என்று கருதவும் மாட்டார், தொடர்புடைய அனைவரையும் கலந்தே முடிவு செய்வார். சனநாயக் முறையில் செயற்பட்டால்தான், இயக்கம் வளரும் என்பதிலே அண்ணா உறுதி கொண்டிருந்தார். அவ்வகையில் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இருந்த வேறுபாடுகளைச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம். பெரியார் தாம் சொல்கிற கொள்கை மட்டுமே முக்கியம் என்றெண்ணுவார்; அது எப்படி வெற்றி பெறும்? யாரைக் கொண்டு வெற்றி பெறும்? யார் அதனை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவார்கள் என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டார். பெரியாரிடம் நான் பழகியிருக்கிறேன். எனக்கு 6 வயதாக இருக்கும்போதே பெரியாரைப் பார்த்துள்ளேன். அவரது பேச்சைப் புரிந்து கொண்டது 10 - 12 வயதிலே. அண்ணாவை 17 வயதிலேதான் தெரியும். கடைசிவரை அவரோடு பழகி உள்ளேன். பெரியாரின் தலைமையை ஏற்று அவருடன் 27 வயது வரையில் பழகிக்