உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


________________

72 கொண்டிருந்தவனே நான். தந்தை பெரியார் சொல்வார்: "நான் எழுதுகிற எழுத்தை நானே அச்சுக்கோத்து பத்திரிக்கை அச்சடித்து, எவரும் வாங்கவிட்டாலுங்கூட அதற்காக நான் கவலைப்பட மாட்டேன்; நானே எழுதுவேன்; அச்சுக் கோப்பேன்; அச்சடிப்பேன்; படிப்பேன்; மடித்து வைத்துக் கொள்வேன்" என்பார். யார் ஆதரவு இருக்கிறது என்பது பற்றியும் கவலை இல்லை என்பார். எதிர்ப்பிலேயே வளர்ந்தவர் அவர். அதற்கு நேர்மாறாக அண்ணா நான் எழுதுவதைப் படிக்கவும் பலர் வேண்டும், பரப்பவும் பலபேர் வேண்டும். அது மக்களைச் சென்றடைய வேண்டும், இல்லையானால் அவ்வளவும் வீண் என்பார். எனவே, நாம் சொல்வதைக் கேட்கக்கூடிய பலபேருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். நாட்டு மக்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு நம்முடைய கருத்து, பொதுநல நோக்கு உடையதாக அமைய வேண்டும் என்று சொல்வார். இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்து விட்டால் மத சாதி வேற்றுமை ஒழியும் என்பது பெரியாரின் முடிவு. மக்கள் மனநிலையில் 'கடவுள்' நம்பிக்கையை அறவே ஒழிக்கும் முயற்சி எளிதல்ல. அதை முன் வைப்பதால் மற்ற கருத்துக்களையும் ஏற்கச் செய்வது கடினம். எனவே, கடவுள் குறித்து அவரவரும் தத்தம் நிலையிலிருந்து தெளிவு பெறும் வழியைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கருதியவர் அண்ணா! 'கடவுள் ஒருவரே' பலரல்லர் என்ற தெளிவு ஏற்பட்டாலே பல பொய்மைகளையும் கண்மூடிச் செயல்களையும், மதவேற்றுமைகளையும் களைய முடியும் என்று கருதியவர் அண்ணா! அதனால்தான் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் திருமூலர் மொழியை மக்கள் ஏற்றாலே போதும் என்றார். பெரியார் நடத்தும் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்பீர்களா என்று நிருபர்கள்