73
________________
73 கேட்டபோது, நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன், அவருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்று நகைச்சுவை தோன்றப் பதிலளித்தவர் அண்ணா. இரண்டு நண்பர்கள் ஒருவன் கடவுள் நம்பிக்கை உடையவன். மற்றவன் நம்பாதவன், அதனால் நண்பனைப் பார்க்குமிடமெல்லாம், கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை, கடவுள் இல்லை என்பதே உண்மை என்பான். மற்றவனோ கடவுள் உண்டு, நம்பாதவனுக்கு நல்வாழ்வோ நல்ல கதியோ கிடைக்காது என்பான். - நம்பிக்கையாளனுக்கு ஒரு பெருந்துயரம். அவன் அன்பு மனைவி ஐந்து குழந்தைகளை விட்டு விட்டு இறந்து விட்டாள். கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று புலம்பியவன் கடவுள் இருந்தால் நமக்கு இப்படி நேருமா என்று நம்பிக்கை இழந்திருந்தான். அன்று துயரப்பட்ட நண்பனுக்கு ஆறுதல் கூறினான் மற்றவன். சிலநாள் கழித்து ஒரு கார் விபத்தில் சிக்கினான் மற்றவன். அவனுடன் பயணம் செய்த 5 பேர் பலி யானார்கள். அவன் ஒருவனே உயிர் தப்பினான், விபத்துக்கு இலக்கணமில்லை என்றாலும் தன்னைக் கடவுள் காப்பாற்றியதாக அவன் நம்பலானான். அதை அவன் நண்பனிடத்திலே கூறி ஒப்புக்கொள்ள எண்ணிச் சென்று கடவுள் இருக்கிறார் என்பதை இன்றுதான் உணர்ந்தேன் என்றான். இதிலிருந்தே கடவுள் இல்லை என்பது எனக்கு விளங்கிவிட்டது என்று சொன்னான் நண்பன். இதுதான் உலகோரின் கடவுள் நம்பிக்கை அமையும் வகை. இது அவரவர் மனநிலையின் விளைவு. உயர்ந்த ஞானியென உலகம் போற்றும் கவுதம புத்தரிடம் சென்ற சில பிராமணர்கள் அவரை மடக்கும் நோக்கில் கடவுள் பற்றிய தங்கள் கருத்து யாது? என்று கேட்டனர். அவர்