74
________________
74 பூட்டப்பட்ட ஓர் அறையில் உள்ளதைச் சொல்ல உங்களால் முடியுமா? என்றார், முடியாது என்றனர். அதே போன்று, மனிதன் முயன்றால் தெரிந்து கொள்ளக் கூடியவற்றைக் குறித்துப் பல கேள்விகளைக் கேட்டபொழுது, அதைத் தாங்கள் பார்க்காததால் - பிராமணர்கள் தெரியாது என்றனர். இவைகளே தெரியாதபோது கண்ணுக்குத் தெரியாத, கருத்துக்கும் எட்டாத கடவுளைப்பற்றி நான் என்ன கூற முடியும் என்றார் புத்தர். விளக்கவோ, விவரிக்கவோ முடியாத ஓர் எண்ணத்தைப்பற்றி உண்டு என்பதிலோ இல்லை என்பதிலோ பொருளும் பயனும் இருப்பதாகக் கவுதம புத்தர் கருதவில்லை. வைதிக தருமத்தை ஏற்காததால் அவரை வைதிகர் நாத்திகர் எனத் தூற்றினர். அவருடைய அறிவு வழிப்பட்ட கொள்கையை மதத்தை வீழ்த்தினர் என்பது வரலாறு. - அறிஞர் அண்ணா மக்களுக்காகத் தொண்டு செய்யப் புறப்பட்ட நாம் எதையும் மக்களுடைய நிலையிலே இருந்து எண்ணிப் பார்த்து, அவர்கள் தெளிவடையும் வழியில் கொள்கையை விளக்க வேண்டும் என்பார். பெரியாரோ கடவுள் நம்பிக்கையை வைத்தே வைதிகப் பார்ப்பனர் மக்களை வஞ்சித்து ஏமாற்றிப் பிழைக்கின்ற காரணத்தால் மக்கள் மனத்தில் கடவுள் நம்பிக்கை ஒழிந்தால்தான் சாதி, மத வேற்றுமை நாட்டும் வைதிக உணர்வை ஒழிக்க முடியும் என்று உறுதி பூண்டவரானார். அவரது சூழ்நிலையும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழக்கூடிய நிலை. அண்ணா நிலை அப்படிப்பட்டது அல்ல. தன் குடும்பத்தைக் கூடக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது அவருக்கு. அப்படி இருந்தாலுங்கூட, அண்ணா மற்றவர்களால் எந்த அளவு சிந்திக்கவும் ஏற்றுக் கொள்ளவும் முடியுமோ அந்த அளவுக்கு முறையாகக்