உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


________________

75 கொள்கைகளை விளக்கிப் பரப்பினால் போதும் என்றார். நான்கூட இவற்றைச் சொல்லவில்லை என்றால் அப்புறம் வேறு எவன் சொல்வான் என்று கேட்பார் பெரியார். நான் மட்டுந்தானா? யார் யாரோ சொன்னார்கள்; நாம் அதை நமது மக்களிடம் பரப்புகிறோம் என்பார் அண்ணா. தந்தை பெரியார் தம்முடைய சிலை வைக்கப்படுகிற பீடத்திலே எல்லாம் 'கடவுள் இல்லை இல்லவே இல்லை'; என்று எழுதச் செய்வதே அவரது இலட்சியமாயிற்று. அதைச் சொல்வதிலேயே அவருக்கு ஒரு மனநிறைவு. இரண்டு பேருக்கும் தமிழினம் வாழவேண்டும் என்னும் நோக்கம் ஒன்றே. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் தமது கொள்கையை விளக்கி, கதையாக, கட்டுரையாக, அறிஞர் அண்ணா வரைவார். தம்மைச் சேர்ந்தவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே தந்தை பெரியார் வரைவார். ஆனால், வரலாற்றுச் சிறப்புள்ள தந்தை பெரியாரின் இயக்கம் செயற்பட்ட பின்னணியில்தான் அண்ணாவினுடைய எண்ணம் குறிக்கோள் வெற்றி பெற்றது எனலாம். பெரியார் இல்லை என்றால், அறிஞர் அண்ணா இல்லை. அவர்கள் எல்லாம் இல்லை என்றால் கலைஞரும், நானுங்கூட இல்லை. நம்மைத் தலைநிமிரச் செய்யும் அப்படிப்பட்ட திராவிட இயக்க உணர்வு பெரியாரால், அண்ணாவால் நமக்கு -நாட்டுக்குக் கிடைத்தது. உலகம் பலவிதம்; ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை உணர்வுடையவன். அதனால் மக்கள் பலநிலைகளில் பல்வேறு வழிப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். வைதிகத்தை உண்மை என்று நம்பி ஏற்றவனும் இருக்கிறான். அதன் நோக்கமே தெரியாமல் அதற்குப் பலியாகிறவனும் இருக்கிறான். வழிவழியாகப் புரோகிதத்