76
________________
76 தொழில் செய்பவர்களிலேகூட, நல்ல மனம் கொண்டவர்களும் உள்ளனர். அந்தத் தொழிலையே அவன் விரும்பாவிட்டாலும் அதுவே அவனுக்குள்ள தருமம் - - கடமை என்று நம்புகிறவனும் உள்ளான். அந்தப் புரோகிதனையே மதகுருவாக சாதிவழி எசமானராக இக்காலத்திலும் நம்பி ஏற்கும் தெளிவற்றவர்களும் உள்ளனர். அவன் சொல்வதெல்லாம் ஆற்றல் வாய்ந்த மந்திரம் என்று நம்பி அவனையே தெய்வமாக மதித்து அவன் காலில் விழுபவர்களும் உள்ளனர். பார்ப்பனர்களிலேயே புரோகிதத்தை ஏற்காத முற்போக்குக் கொள்கையுடையாரும் பலர் உள்ளனர். உண்மை உணர்ந்தும் அதை ஊருக்குச் சொல்லாத பார்ப்பனர்களும் பலர் உள்ளனர். ஒப்புக்குப் புரோகிதரிடம் மண்டியிடும் செல்வரான பார்ப்பனரல்லாதாரும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட சமுதாய மக்களின் மனமும், உணர்வும் பல்வேறு நிலையில் அமைவதை எண்ணிப் பார்த்திட்ட ஆழ்ந்த சிந்தனையாளரான அறிஞர் அண்ணா, பெரும்பாலோர் ஏற்கக்கூடிய பக்குவமான முறையில், பகுத்தறிவு நோக்கம் வெற்றிபெற ஏதுவான கருத்துக்களையும், செய்திகளையும் அதற்குரிய சான்றுகளையும் மக்களிடம் எடுத்து வைப்பதே பயன்தரும் என்று கருதினார். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, மக்கள் மனத்தில் அவ்வப்போது தோன்றக்கூடிய எண்ணங்களை எடுத்துக்காட்டியே தமது வாதத்தை எடுத்துவைத்தார் அண்ணா. அதனால் அவரது எழுத்தையும் பேச்சையும், நாடகத்தையும் பெரும்பாலான மக்கள் விரும்பிக் கேட்கவும் காணவும் செய்வதன் மூலம் தமது கொள்கையைப் பரப்புவதில் பெரும் வெற்றி கண்டார். - அவரது பேச்சுத்திறன் எழுத்தாற்றல் கற்பனை வளம், எடுத்துக்காட்டு, உவமை அழகு, சிந்தனை ஓட்டம்,