உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


________________

77 கலைப்படைப்புத் திறன் காட்டும் சிறுகதை, உரையாடல், நெடுங்கதை, நாடகம் ஆகியவை மக்களைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தன. அவருடைய எளிமை, இனிமை இயல்புகளும், அன்புள்ளமும் தோழமை உணர்வும், சனநாயக நடைமுறையில் கொண்டிருந்த உறுதியும் -அவரது அயராத உழைப்பும் தளராத தன்னம்பிக்கையும், அறிவாற்றல் மிக்க அவரிடம் காணப்பட்ட அடக்கமும் அவரது நா அசைவுக்கு மக்களைக் கட்டுப்பட வைத்தன. அவரால்தான் திராவிட இயக்கம் மக்கள் இயக்கமாக சனநாயக சக்தியாக மலர்ந்தது என்பதை எவரும் மறுத்திடார். அதனால்தான் அறிஞர் அண்ணா முதலமைச்சராக அமர்ந்து, நாட்டுக்கு அவர் செய்ய எண்ணிய பலவற்றை நிறைவேற்ற முடிந்தது. தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார், சுயமரியாதைத் திருமணம், செல்லுபடியாகும் சட்டத்தினைச் செய்தார். இந்தியை நீக்கி, இருமொழித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயற்படுத்தினார். அந்த அளவிலே தமது இலட்சியம் வெற்றி பெறத் தொடங்கிய நிலையில் இயற்கை எய்தி விட்டார். அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வருமுன்னர் எதிர்த்துக் குரல் எழுப்பிய பெரியாரும் பின்னர் தம்முடைய இலட்சியம் வெற்றி அடைவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். அண்ணா மறைந்த போது துயரத்தில் ஆழ்ந்த பெரியார், "புத்தரைக்கூட அண்ணாவைப் போல, என்னால் கருதமுடியாது. பல புத்தர் சேர்ந்தால்தான் அண்ணாதுரை ஆகமுடியும்!" என்று வியந்தார். ஓர் பெரியாரின் சிந்தனையில் வைரத்தின் உறுதி, அண்ணாவின் இதயத்திலே வைரத்தின் ஒளி. தனிக்கட்சி அமைத்ததற்குப் பின்னரும் அண்ணா சொன்னார், பெரியார்