78
________________
78 - தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நம்மை ஏற்பதாக இருந்தால் நம்முடைய கட்சியில் அவருக்குத் தலைமையிடம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்" என்று. "என் வாழ்நாளில் நான் கண்டதும் தலைவராகக் கொண்டதும் தந்தை பெரியார் ஒருவரையே" என்று பெரியாரைப் போற்றி உரைத்தவர் அண்ணா! இந்த நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார் ஒரு சகாப்தம் என்று போற்றியும் பேசியவர் அண்ணா. இந்த இனத்தின் விழிப்பிற்கு அவர் ஆற்றிய தொண்டினை வேறு யாராலும் செய்ய முடியாதென்று அண்ணா கருதினார். எனவே, அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கங்கொண்ட அறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்க்கப்பட்ட வழியிலேயே, சமூகநீதியை நிலைநாட்டி அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்தாலும், மகளிர் உரிமைக்காகப் பாடுபட்டாலும், ஆட்சியில் அமர்ந்து முற்போக்கான திட்டங்கள் பல தீட்டி நிறைவேற்றப்பட்டாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடம் கிடைப்பதைப் பொறுத்தே ஆட்சி அமைக்க முடியும். அறிஞர் அண்ணா "சனநாயகம் என்பது சட்டமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து தேர்தல் நடத்துவது மட்டும் அல்ல; சட்டமன்ற முறைப்படி நடத்தும் ஆட்சி நிருவாகம் மட்டுமல்ல; எல்லோரையும் சமமாகவும், உடன்பிறப்பாகவும் மதிக்கிற ஒரு வாழ்க்கை முறை. ஒப்பரவு வளர்த்து, விட்டுத் தருவதற்குப் பக்குவம் பெறுகிற முறை. பிறர் வாழ நாம் வாழ்வோம் என்று கருதும் வாழ்க்கை முறை" என்று விளக்கியுள்ளார். ஒரு சூழ்நிலையிலே திராவிட முன்னேற்றக் கழகத்திலே இடம் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். பிரிய நேரிட்டது. அதற்கான காரணமோ விளக்கமோ கேட்டால் காவல்துறைத் தலைவர் (Inspector General of Police) ஆக இருந்த திரு. லட்சுமிநாராயணன், திரு. மோகன்தாசு இருவரும் எழுதியுள்ள