79
________________
79 ஏடுகளைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம். நான் தி.மு.க.வில் உள்ளவனாதலின் அதை இங்கே விளக்கிப் பேசுவதை விரும்பவில்லை. அதைப் படிப்பவர்கள் எதனால் ஒரு கட்சியை எம்.ஜி.ஆர். தோற்றுவிக்க நேரிட்டது என்பதை அறியலாம். பின்னர் ஏன் தி.மு.க.வில் இருந்த தலைவர்கள் சிலர் அங்கே போய்ச் சேர்ந்தார்கள் எனிலோ, அங்கே நாற்காலி இருக்கிறது அதனால் சென்று அமர்ந்தோம் என்பார்கள். அரசியல், (Politics) பதவியில் இருந்தால்தான் உலகம் நம்மை மதிக்கும் என்ற நினைப்பிற்கு நம்மை ஆளாக்குகிறது. அது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கிவிடும். முதலிலே பதவி ஆசைக்கு ஆட்படுகிற காரணத்தினால்தான், திசை தெரியாமலே பறக்க நேரிடுகின்றது. ஆனால், அவரவருடைய தனிப்பட்ட உணர்வுகளால் ஏற்படுகிற விளைவுகளால், ஓர் இயக்கத்தின் இலட்சியத்தின் வெற்றி வாய்ப்பு தள்ளிப் போய்விடுவது உண்மை. திராவிட இயக்கம் பல அரசியல் கட்சிகளாக இயங்குகிற நிலையில் இன்றைக்குப் பல பேருடைய மனத்திலே சுயமரியாதை தன்மானக் கொள்கையில் ஆர்வம் இல்லை. ஓர் இனத்தினுடைய வீழ்ச்சியை மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் சுயமரியாதை உணர்வு பெறவேண்டும். அந்த நோக்கத்தில், பகுத்தறிவுக் கருத்தை முடிந்தவரையில் முழு அளவுக்குப் பரப்ப வேண்டும். ஏன்? பகுத்தறிவு என்பது பொதுவாகக் (Reasoning) காரண காரியச் சிந்தனை ஆகும். அவரவர்கட்கு இயலும் அளவில்தான் பகுத்தறியும் நோக்கமும் மனப்பான்மையும் உருவாகும். அவரவர்க்கு எவ்வளவு முடியுமோ, அந்த அளவில் பெறக்கூடய பகுத்தறிவைப் பயன்படுத்தினால் போதும். பகுத்தறிவைப் பயன்படுத்துவோர் தரமும், வகையும்