உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


________________

80 பலவகைப்பட்டன. பற்பல மதவாதக் கொள்கைகளில் எதைக் குறித்தும் ஒரே முடிவுக்கு வருகிற வாய்ப்பு இல்லை, அது இயலாது. ஒருவரிடம் எந்த மதச்சார்பு உணர்வும் மிக அழுத்தமாக இடம் பெற்றிருக்குமானால் அவர்கள் அது குறித்துப் பகுத்தறிவதும் கடினமே. நீண்ட காலமாகத் தமிழர்களுக்கு இடையிலே நிலவிய மதவேறுபாடுகளுக்கு இடையிலும், எல்லோரையும் மனிதனாக மதிக்கிற அடிப்படைக் கொள்கையும் சமத்துவ நோக்கும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்". "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', "சாதி இரண்டொழிய வேறில்லை. சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்”, "சாதிகள் இல்லையடி பாப்பா", "இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே,' என்னும் வகையில் இப்படியொரு கொள்கை விளக்கம் நடைபெற்று வந்துள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயும் அதற்கு முன்னரும் நிலவிய தமிழர் மரபு வழிப்பட்ட கொள்கை இவை. "உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” என்னும் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடலில் "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே"