உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


________________

81 எனக் கூறப்பட்டுள்ளது. அது வருணாசிரமக் கருத்துக்கு நேர் மாறான கருத்து. நால்வகையாக மக்கள் பிளவுபட்டமை என்பது வருணாசிரம தருமத்தில் உள்ள நால் வருணச் சாதி அல்ல. நால்வகை என்பது பலவகை என்றும் பொருள்தரும். அது சமுதாயத்திலே உள்ள பல ஏற்றத்தாழ்வு நிலை. வருணாசிரம தரும சாதிதான் என்று சொன்னாலுங்கூடக், கீழ்ச்சாதியாரிடத்தில் மேல்சாதிக்காரன் கல்வி கற்கச் செல்வான் என்பதால், அந்தப் பெருமை கீழ்ச் சாதிக்காரனுக்கு உளதாகிறது, அதிலேயிருந்து வருணசாதி அடிப்படையில் அமைந்த கொள்கையை மறுத்த பாடல் அது என்னும் சிறப்பு விளங்கும். சுருக்கமாகக் கூறின், தமிழனுடைய பண்பாடு, திருக்குறள் பண்பாட்டைத் தழுவியது. ஆரியப் பண்பாடு வேதகாலத்திற்குப் பின்னர் கீதையின் கருத்தாக வளர்ந்தது. திருக்குறள் கருத்தின் அடிப்படையை ஒப்பாதது கீதை. கீதைக்கு நேர் முரணான கருத்தைக் கொண்டது குறள். இடையிலே ஒன்றிரண்டு கருத்துக்கள் ஒரே வகையாகத் தெரியலாம். பசித்தவனுக்குச் சோறு போடுவது தமிழ் அறம். இந்தக் கொள்கை உலகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் வாழச் செய்வதற்கு வழிகாட்டியாவது. அதற்கு அடிப்படையாகும் ஈகையைக் குறித்த எண்ணங்களை எடுத்துச் சொல்வது திருக்குறள். அவரவர் வினையின் வழிப்பட்ட பிறவிக்குரிய வருண தருமத்திற்கான, தொழிலைக் கைக்கொண்டு (வருணதருமத்தை மீறாது) மக்கள் வாழவேண்டும் என்பதையும் அந்தக் கடமையிலே இருந்து மாறக்கூடாது என்பதையும் வலியுறுத்துவது கீதை. அந்தக் கீதையுங்கூடக் கிருட்டிணன் இயற்றியதல்ல; சொன்னதுமல்ல. கீதை உலகியல் வாழ்வை மேம்படுத்துவதற்குரிய அடிப்படையான சமத்துவத்தை ஏற்கவில்லை. மாற்றானை வஞ்சிப்பதற்கும் எப்படியும் கொல்வதற்கும், பொய் ???