84
________________
84 தமிழர்களை சாதிமுறையில் இழிமக்களாகக் கற்பித்துத் தம்மைப் பூதேவர்களாகவும் உயர்த்திக் கொண்டு அர்ச்சகராகவும், புரோகிதராகவும் ஆகி, மத வழிப்பட்ட குருமார்களாகவும் ஆயினர். மதவழி குருமார்களாக ஆன நிலையால், தமது சமற்கிருதத்தை தேவபாடை எனவும் தமிழ் சூத்திரர் மொழியாதலின் நீசபாடை எனவும் நாட்டு மக்கள் ஏற்கும் நிலையை உருவாக்கினர். தென்னக மன்னர்கள் பார்ப்பனரைக் குருவாக மதித்து ஏற்றவர்களானதால் 'மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பதற்கு ஏற்ப, மக்களும் அவர்களைத் தனிப்பிறவியாக மதிக்கும் மனத்தினராயினர். அவர்தம் பொய்மை, புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி ஆகியவற்றைத் தெளிய முடியாதவர் ஆயினர். ஐயம் எழுந்தாலும் வெளியில் சொல்லக்கூட முடியாத சூழல் நிலவியது. பார்ப்பனர்கள் சொல்லையும் - செயலையும் சந்தேகிப்பதே பாபம் என்று சாத்திரம் பேசிய சழக்கர்கள் தெளிந்த தமிழர்களையும் கண்மூடி நம்ப வைத்தனர். இந்தக் கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருந்த மக்களை விழித்திடச் செய்யவே திராவிட இயக்கமும் குறிப்பாகப் பகுத்தறிவு அடிப்படைச் சுயமரியாதை இயக்கமும் தோன்ற வேண்டியதாயிற்று. - "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்னுமாறு தமிழர் வாழ்வில் மன்னனுக்கே தலையான இடம் வழங்கப்பட்டிருந்தது உண்மையே. வள்ளுவரும் மன்னனுக்கே நாட்டையும் அங்கமாக்கி உரைக்கின்றார். அக்காலத்தில் மன்னர்களின் ஆற்றலுக்கு ஏற்பவே 'நாடு' உருவாகி வந்ததும் மன்னனின் செங்கோன்மையைப் பொறுத்தே மக்கள் வாழ்வு அமைந்ததும் அதற்குக் காரணமாகலாம். ஆனால், மன்னன் குடிமக்களைக் காப்பதையே தலையான கடமையாக ஏற்றிருந்தான். மன்னன் உயிரெனினும்