85
________________
85 குடிகளையே தன் உடலாக மதித்தான். குடிபழி தூற்றும் கோல் உடையவனாதலை இகழ்வாகக் கருதினான். அக்காலத் தமிழ் மன்னர்கள் குடிமக்களுடன் நெருக்க முடையவராய் வாழ்ந்தனர். எனவே, மன்னர் ஆட்சி முறை நிலவினாலும், மக்கள் உரிமைகள் மதிக்கப்பட்ட நிலையால், மக்களிடையே சமத்துவமும் சனநாயக நடைமுறையும் இயல்பாகவே இடம்பெற்றிருந்தன. சங்ககாலத்துப் புலவர்களிடம் மன்னர்கள் கொண்டிருந்த மதிப்பினைச் சங்கச் செய்யுட்களால் அறியலாம். அந்தநாள் வாழ்வு தமிழர்கட்கு வாய்த்திட வேண்டும் என்பதையும் புரட்சிக் கவிஞர் வலியுறுத்துவார். - அந்த வாழ்வினை சூழலை உருவாக்க வேண்டுமெனில் எப்படிப்பட்ட கொள்கைத் தெளிவும் உரிமை நலன்கள் காக்கப்பட்ட தமிழர்கள் - சமத்துவ நோக்கும் தோழமை உணர்வும் கொண்டவர்களாக வேண்டும் என்பதையே அண்ணா விளக்கியுள்ளார்கள். திராவிடத்தின் வருங்கால வாழ்வு அப்படிப்பட்ட சனநாயக நெறியில் தழைப்பதாக வேண்டும். அந்தத் திராவிட மரபுக்கு ஏற்ற நெறியை வளர்த்திட நாம் உறுதிகொள்ள வேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் திராவிடர் இயக்க ஆட்சிக்காலத்திலே நிறைவேற்றப்பட்ட சாதனைகளை எல்லாம் குறிப்பெடுத்து வந்திருந்தாலுங்கூட அவற்றை விவரிக்கத் தேவை இல்லை என்று கருதுகிறேன். மகளிர் உரிமைக்கு வைதிகம் எப்படியெல்லாம் மாறுபட்டது என்பதையும், மனித உரிமைகட்கும், மானிட நேயத்துக்கும் ஆரிய வைதிகக் கொள்கை எப்படி மாறானது என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என்ற நம்பிக்கையோடும், திராவிடத்தின்