இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
87
________________
87 வெளியுலகுக்கு அனுப்பி வைக்கும் படித்த பட்டதாரி இளைஞர்கள் மூலம், தன்னல ஆதிக்கத்தையும், கொடுமை இழைக்கும் சக்திகளையும் அடியோடு ஒழிப்பதுடன், சாதி வேற்றுமையையும், பிறப்பு உயர்வு பேசும் பித்தலாட்டத்தையும், எதிர்த்துப் போராடுவதன் மூலம், மானிடத்தின் மாண்பு மேலோங்கச் செய்திடப் பாடுபடவேண்டும்". அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை உங்கள் முன்வைத்து, திராவிடத்தின் பண்பாட்டுக் கேற்ப, சாதியற்ற சமத்துவ சமுதாயமும் மதவேறுபாடு கருதாத உடன்பிறப்பு உரிமையும் தழைக்கும் வகையில், ஜனநாயக நெறி நின்று, பணியாற்ற உறுதிகொள்ள வேண்டிக் கேட்டுக்கொண்டு இந்த திராவிட இயக்கக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறேன். வணக்கம்!