89
________________
பேராசிரியர் டாக்டர் க. அன்பழகன் பேராசிரியர் க. அன்பழகன், தஞ்சை மாவட்டம் திருவாரூரை அடுத்த காட்டூரில் 1922-ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், சுயமரியாதை இயக்க முன்னோடியான திரு. மு. கலியாணசுந்தரனார். இளமையில் இராமையா என்னும் பெயருடையவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும்போது 1941-ல் தனித்தமிழ் ஆர்வத்தால், அன்பழகன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அக்காலத்திலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு, தமிழ் இயக்கம், தன்மான இயக்கம் ஆகியவற்றில் முனைந்து செயற்பட்டார். 1944-ல் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். 1944 முதல் 1957 வரை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் அடிதொடர்ந்து, திராவிடர் இயக்கப் பேச்சாளரானார். 1949-ல் அறிஞர் அண்ணாவுடன் தி.மு. கழகத்தினைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராவார். 1957, 1971, 1977, 1981, 1985, 1989-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1962-ல் சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் தி.மு.க. ஆட்சியில், கலைஞர் மு.க. முதல்வராக இருந்தபோது 1971 முதல் 1976 வரை நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும், 1989 முதல் 1991 வரை கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1996-ஆம் ஆண்டுகளில் – முதல்வர் கலைஞர் தலைமையில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். 1989-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமது பேச்சாலும் எழுத்தாலும் தமிழ் மொழிப்பற்றையும் இன உணர்வையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் மக்களிடையே வளர்த்து வருபவர். 1974-ல் தி.மு.க.வின் பொருளாளராகவும், 1977- ல் தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தொண்டினை இன்றும் தொடர்பவர். தி.மு. கழகத்தின் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, பலமுறை சிறைப்பட்டவர். ஈழத்தமிழர்கள் உரிமைகாக்க சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து 1983-ல் விலகியவர். வகுப்புரிமைப் போராட்டம், கலையும் வாழ்வும், விடுதலைக் கவிஞர், உரிமை வாழ்வு, தமிழ்க்கடல் அலை ஓசை பரவுந்தமிழ் மாட்சி, நீங்களும் பேச்சாளராகலாம், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் முதலான நூல்களை இவர் எழுதியுள்ளார். பூம்புகார் பதிப்பகத்தார்