உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட சம்பத்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கூறினோம். அதை எதிர்த்த கள்; இப்போது விகடன் கூறுகிறது... மகிஷாசுரமர்த்தனி என்ற திராவிடக் கதையில் புராணம் புகுந்துவிட்டது என்று ! நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறோம்; தாமதமாக வாவது புத்தி வந்ததே என்று! ஆனால் விகடன் அவ் வளவு பைத்தியக்காரனல்லவே...... பழைய பழக் கத்தை அறவே விட்டுவிடவில்லை, கட்டுரையின் முடி விலே கொஞ்சம் விஷத்தையல்லவா கக்கியிருக்கிறான். விஷம வேலை எங்கே திராவிடக் கதை என்று கூறுவதால் 'திரா விட நாடு! பிரச்சினைக்கு இடங் கொடுத்துவிடு வோமோ என்று பயந்துகொண்டு "திராவிட சம்பத்து என்றால் அப்படி ஒரு இனம் இருந்ததாகவோ இருக் கிறதாகவோ நாம் ஒப்புக் கொள்ளவில்லை." 66 விகடனின் விஷமத்தைப் பாருங்கள். இன வெறிக்கொள்கை, ஒரு மித்' (Myth) அதாவது புரா ணக் கற்பனை என்கிறார்கள் இன்றைய விஞ்ஞான அறிஞர்களும் ஆராய்ச்சியாளரும். 99 விஞ்ஞான அறிஞரை, ஆராய்ச்சியாளரை எதற் குப் பயன்படுத்துகிறார் கவனியுங்கள், விகடனார்! இன வெறிக்கொள்கை ஆகாதென்கிறார்களாம் அறிஞர்கள். இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு நம் இன முழக்கத்தைப் பாழாக்கக் கனவு காண்கிறார் நகைச் சுவை குரங்கார் !.