இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திராவிட சம்பத்து
அரசியல் நோயாளிகள் 8 கண்னை மூடிக்கொண்டே படுத்திருப்பார்கள். திடுக்கென கத்துவார்கள் அய்யோ அப்பா' என்று! இப்படி சில அரசியல் நோயாளிகள் இருக்கிறார்கள். நான் நோயாளி என்கிறேன்; அதை அவர்கள் ஸ்டண்ட்' என்பார்கள், வாயை மூடி வாலைச்சுருட்டி உட்கார்ந்திருப்பது. எதிர்பாராத நேரத்தில் எழுந்து பாய்வது. அந்தப் பாய்ச்சலிலே பயன் இருந்தால் மேலும் மேலும் தாவுவது, இல்லாவிட்டால் பழைய படியே மரக்கிளையில் தொங்குவது, இது நமது அக்கிரஹாரத்தின் பிரதிநிதி- அம்மாமிகளின் அபிமா னச் செல்வன் சமாச்சாரம். வால் ஆடுகிறது ஆனந்தவிகடனுக்குப் பழக்கமான தென்னாட்டுச் செல்வங்களைப் பற்றி எழுத ஆரம் பித்தது, நம்மீது ஒரு பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது.