உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 175 பொருமை ஆசை கோபம் கடுஞ்சொல் ஆகிய இந்த கான்கு திமைகளும் நீங்கி நின்றகே என்றும் நலமான அறம் என்பதாம். பொல்லாத புன்மைகள் பிறர்க்கு அல்லல்களை விளேக்கும்; அவற்ருல் பாவமே விளையும் ஆதலால் அவை ஒழிக்க அளவுதான் புண்ணியம் விளைந்து போகங்கள் சுரங் து கண்ணியமாய் வரும். ஆசையை அடக்கு; கோபத்தை மடக்கு; பொருமையை ஒழி; எவரிடமும் இனிமையாய்ப் பேசு; அவ்வாறு ஆயின் உன் னிடம் தருமங்கள் உறவாப் வந்துகின்று உயர்கலங்களே அருளும். உள்ளத்தில் நல்ல இயல்புகள் இல்லாதவன் உலகத்தில் எவ்வளவு பெரிய அறங்களைச் செய்தாலும் அவன் நல்ல பலனை அடையான்; அல்லலே அடைவன் என்பது இதில் உணர்த்தப் பட்டது.இவ்வுண்மையைத் தக்கன் தக்கபடி உணர்த்திகின்ருன். ச ரி த ம். தக்கன் பிரம புத்திரன். சிறு விதி என்று ஒரு மறு பெயர் உடையவன். அதிசய நிலையில் எவரும் கதிசெய்ய கின்ற இவன் ஆதி சக்தியான உமாதேவியைப் புத்திரியாகப் பெற்ருன். தான் பு ரி க் க அருங்கவத்தின் பெரும் பயன வந்து தோன்றிய அம்மைக்குக் கன் பெயருரிமை கோன்ற தாகூடிாயணி என்று பேரிட்டுப் பெருமகிமையோடு போற்றிவந்தான். உ ரிய பருவம் வரவே பரமனுக்குக் திருமணம் செப்த உதவினன். அதன்பின் சிவபெருமானக் க ன த மருமகனுகவே கருதிக் களித்தான். அந்தக் களிப்பின் செருக்கோடு ஒருநாள் கைலைக்குச் சென்ருன். அங்கிருந்த சிவ கணங்கள் இவனே மதியாமல் கடுக்கன; கடை யை விடையோனுக்கு அனுப்பியும் விடை சரியாய் வரவில்லை; ஆகவே வெகுண்டு மீண்டான். பரமனை இகழும் நோக்கத்தோடு ஒரு வேள்வி செய்ய நேர்க் கான்; திருமால் பிர மன் முதலிய தேவர்கள் யாவரையும் வரவழைத்து ய க ம் செப்கான்; அவியைச் சிவனுக்கு அளியாமல் அவமதிக்கமையால் வீரபத்தி ரர் விரைந்து வந்து யாகத்தைச் சிதைத்தார்; யாவரை யும் வகைத் தார். தக்கனும் கலைபோய் நிலைகுலைந்த வீழ்ந்தான். பொருமை யால் வெகுண்டு செய்தமையால் நல்ல வேள்வியும் பொல்லாத காப் அழிக்கத. அழுக்காறு அவா வெகுளி இன்னுச்சொல் இல் லாததே அறம் என்பதை உலகம் இவன் பால் உணர்க் து கின்றது.