208 திருக்குறட் குமரேச வெண்பா சரி த ம். விராடன் என்பவன் மச்ச தேசத்து மன்னன். நீதிமுறை யோடு அரசு புரிந்து குடிகளே எ வ்வழியும் செவ்வையா இனிது பாதுகாத்து வந்தான். இவனுடைய அருமை மனைவி பெயர் சுதேட்டிணை. அவளோடு அமர்ந்து இனிய போகங்களை நுகர்ந்த எல்லாருக்கும் பேருபகாரியாய் இதம் புரிந்து வந்தமையால் உலகம் இவனே உவந்து புகழ்ந்து வக்கது. இவனது அரச வாழ் விலும் இல்வாழ்விலும் அரிய பல கருமங்கள் பெருகி வந்தன. துறவிகள் முதல் பலரும் இவனுடைய உதவிகளே அடைந்து உவந்து வாழ்ந்தனர். பாண்டவர் பன்னிரண்டு வருடங்கள் வனவாசம் செப்து முடித்தபின் மீண்டும் ஒர் ஆண்டு மறைவாப் அமர்த்திருக்கத் தகுதியான இடம் யாண்டு உளது? என்று நீண்ட ஆலோசனைகள் செய்தனர். அப்பொழுது தருமரை விசயன் உரிமையுடன் நோக்கி இவனுடைய நிலைமை தலைமை நீர்மைகளை விளக்கி இவனேச் சார்ந்திருப்பதே ஈலம் என்று ஒர்க் து உரைத்தான். அவ்வுரைகளுள் சில அயலே வருகின்றன. நீதியும் விளேவும் தருமமும் கிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி ஆதியின் மனு நூல் வழியினில் புரப்பான் அவனியை மனுகுலத்து அரசன்; மாதிர முழுதும் அவன்பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி வேதியர் பலரும் உறைவதும் அவனே விராடர்கோன் மச்சநாடு ஐயா! (1) ஆங்கவன் நகரி எய்திமற் றின்றே ஐவரும் அணியுருக் கரந்து தீங்கற உறைவ தல்லது வெருேர் சேர்விடம் இலதெனச் செப்பத் தேங்கிய அருளுக்கு இருப்பிட மான சிந்தையான சிந்தையால் துணிந்து பாங்குறை அரசர் யாரையும் தத்தம் பதிகளே செல்கெனப் பகர்ந்தான். (பாரதம்) விராட லுடைய குன கலங்களையும் அன்பு ஆகாவுகளேயும் குறித்துத் தம்பி இவ்வாறு தகவுடன் கூறவே தருமர் உள்ளம்
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/207
Appearance