பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2098 திருக்குறட் குமரேச வெண்பா மொழிகளேக் கேட்டு அந்த அதிபதிகள் இருவரும் சமா தானமாய் அமைதியுற்று வாழ்ந்தனர். இவ்வாறு எவ் வழியும் யாவருக்கும் செவ்விய நீதிகளைப் போதித்து எங்கும் இவர் சீர் பல செய்தருளினர். இவருடைய உள் ளப் பண்பும் உரை கலங்களும் பலரையும் நல்வழிப் படுத்தின. ஆவூர் மூலங்கிழார், நல்லிறையனர் முதலிய இவர் காலத்துப் புலவர் எவரும் இவர் பால் பெருமதிப்பு வைத்திருந்தனர். யாண்டும் இதமே புரிந்து வந்த இவர் பல நாடுகளேயும் காண விரும்பி ஒரு முறை யாத்திரை போயிர்ை. இவரது பிரிவை கினேந்து அரசன் பெரிதும் வருங்தின்ை. இவரை ஒரு முறை கண்டவர் மீண்டும் எப்பொழுது காண்போம்? என்னும் ஆவலுடையராய் யாண்டும் மேவி யிருந்தனர். அரசனது ஆர்வ நிலையை அறிந்து விரைந்து வந்து அங்கு இவர் அருள் புரிந்திருங் தார். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் புலவர் தொழில் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். இவரது இனிய நீர்மை அரிய சீர்மையாயுளது. கலைமதி என்னக் கலைமதியர் இன்பம் நிலவ மிளிர்வர் நிலம். உலகம் உவப்ப ஒழுகுவதே புலவர் இயல்பாம், mo-Ho Ho 395. தேடுபுகழ்ச் சாந்திகண்ணன் தேருதங்கன் கற்றதகுல் கூடினர்.சிர் என்னே குமரேசா-நாடி உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்ருர் கடையரே கல்லா தவர். (5) இ-ள் குமரேசா.: சாந்தி கண்ணன் உதங்கன் என்னும் இவர் ஆசிரியரிடம் பாங்காய்ப் பணிந்து கின்று ஏங்கிக் கற்று ஏன் ஓங்கிர்ை? எனின், உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்ருர், கல்லாதவர் கடையரே என்க. கல்வியை எவ்வகையானும் கற்க என்கிறது. செல்வர் முன் வறியர் போல அறிஞர் எதிரே ஏங்கி