பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2102 திருக்குறட் குமரேச வெண்பா கைப்பொருள் கொடுத்தும் கற்றல், கற்றபின் கண்ணும் ஆகும்; மெய்ப்பொருள் விளேக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஒர்துனேயும் ஆகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னம் புகழுமாம் துனேவி ஆக்கும் இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னே? என்ருன். (சீவகசிந்தாமணி 1595) தோணி இயக்குவான் தொல்லே வருணத்துக் கானின் கடைப்பட்டான் என்றிகழார்-காணுய் அவன்துனேயா ஆறுபோய் அற்றே நூல் கற்ற மகன்துணையா நல்ல கொளல். (நாலடியார் 136) திரியழல் கானின் தொழுப விறகின் எரியழல் கானின் இகழ்ட ஒருகுடியில் கல்லாது மூத்தானேக் கைவிட்டுக் கற்ருன் இளமையா ராட்டும் உலகு. (நான்மணி 66) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. (நறுந்தொகை 85) இவை இங்கே சிந்திக்கத்தக்கன. கல்வி கண் அனே யது: உயிர்க்கு இனியதுனே அரிய மகிமைகள் பலவும் அருள்வது; இருமையும் இன்பம் தருவது; பெருமை மிக வுடைய அதனே எவ்வகையானும் உரிமையுடன் பெற்று உயர்க என இவை ஈங்கு நன்கு உணர்த்தி யுள்ளன. செல்வத்தில் சிறந்து குலத்தில் உயர்ந்திருந்தாலும் கல்லாதவன் இழிந்தவன் ஆகின்ருன்: யாதும் இல்லாத வனுயினும் கற்றவன் எல்லா மேன்மைகளும் எய்தி யாண்டும் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குகின்ருன், செல்வத்திமிர்கொண்டு குலமானம் பாராட்டி வினே இழிந்து நில்லாதே; கற்றவர் யாவராயினும் அவரிடம் தலே வணங்கி நின்று தாள் பணிந்து பேணித் தகவுடன் கலே பயின்று நிலை உயர்ந்து கொள்க, கல்வி புனிதமான சிறந்த செல்வம் ஆதலால் அத இனப் பெறுதற்கு உரிய நல்ல தன்மைகள் நயமாஅமைந்