பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 103 கருக்க வேண்டும், தக்க தகுதிகள் இல்லையேல் காதவராய் அவர் தவிர்க்கப் படுவர். களிமடி மானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னுாற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி படிறன் இன் ைேர்க்குப் பகரார் நூலே. கற்கவுரிய நல்ல தகுதியில்லாதவரை இது காட்டியுளது. மேலோர் பால் நூலேக் கற்க நேர்ந்தவர் இனிய இயல்புகள் தோய்ந்து இதநலங்கள் வாய்ந்து யாண்டும் பணிவுடன் புனிதமாய் ஒழுகி வர வேண்டும். கோடல் மரபே கூறும் காலேப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து இருஎன இருந்து சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவிவாய் ஆக நெஞ்சுகளன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப் போஎனப் போதல் என்மனர் புலவர். (நன்னூல்) ஆசிரியர் முன் அடங்கியிருந்து கற்கும் முறைகளே இதில் அறிந்து கொள்கிருேம். இவ்வாறு பண்புடன் கற்றவர் பின்பு உயர்ந்து இன்புடன் வாழ்கின்ருர். கல்லாதவர் கடையரே என்றது கற்றவரது தலே மையை விளக்கி அவரது கிலேமையைத் துலக்கிகின்றது. கல்வியைச் சம்பாதிக்கும் துறைகளிலுள்ள மிறை களுக்கு அஞ்சி ஒதுங்கி நின்றவர் மூடராய் இழிந்து படுவர். அந்த இழிவு யாதும் நேராமல் விழுமிய மகளு. யுயர்ந்து திகழ வேண்டின் கல்வியை விழைந்து கொள்க. செல்வத்தை நாடி இரத்தல் சிறுமையே; கல்வியை யாரிடமும் கால்பணிந்து-மெல்லியனுய் நின்று பயின்று நிலேதெளியின் நீணரிலத்தில் என்றுமே கண்டான் ைெச.