பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 04 திருக்குறட் குமரேச வெண்பா உரிமையுடன் பொறுமையாய்க் கற்றவர் எங்கும் பெருமை மிகப் பெற்று இருமையும் இன்பம் உறுவர். இவ் வுண்மை சாந்தி, கண்ணன், உதங்கன் பால் உணர வந்தது. இவர் கல்வி பயின்ற கிலே எவரும் கருதித் தெளிந்து உயர்ந்து கொள்ளவுரியது. ச ரி த ம். சாந்தி என்பவர் விசிகன் என்னும் ஒரு வேதியன் புதல்வர். அருளும் பொறையும் அமைதியும் உடையவர். கல்வியை நன்கு கற்க விரும்பி நல்ல ஆசிரியரை எங்கும் நாடித் திரிந்தார். முடிவில் பூதி என்பவரை அடைந்தார். அவர் சிறந்த புலவராயினும் கொடுஞ் சினமுடையவர். கடுங் கோபியான அவரை அணுக எவரும் அஞ்சுவர். அவரிடம் அமைதியாய் அமர்ந்து வணங்கி வழிபாடுகள் செய்து இவர் வருங்திக் கற்ருர். அவர் இன்னல் பல புரியினும் இவர் இனியராயிருத்து பயின்று வந்தார். ஒரு நாள் அவர் புரிந்து வந்த வேள்வியில் நெருப்பு அவிந்து போயது. அருகே கில் இவரைக் கனன்று நோக்கினர். இவர் அக்கிசிை தேவனே வேண்டினர். அனேந்து கின்ற தி உடனே கொழுந்து விட்டு எழுந்தது. அவர் வியந்தார். சாத்த சீலனை இக்தச் சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி அருளினேன்; உனதுசினக் கொதிப்பை ஒழித்து இவனது மனப்பண்பை மதித்து நட ' என வானிலிருந்து ஒரு ஒலி எழுந்து மறைந்தது. ஆசிரியர் அஞ்சி நாணி அன்று முதல் பாதும் வெகுளா மல் ஆர்வம் மீதுார்ந்து அரிய கலேகள் பலவும் உரிமை யுடன் இவர்க்கு ஒதியருளிர்ை. இவர் பெரிய மேதை யாப் அரிய புகழ் பெற்ருர். கல்வியின் மேலுள்ள ஆசை யால் அல்லல்கள் பலவற்றையும் சகித்துக் கொண்டு கற்று வந்தமையால் உலகம் வியந்து போற்றும்படி இவர் உயர்ந்து விளங்கினர். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்க வேண்டும் என்பதை யாரும் காண இவர் காட்டி நின்ருர். விரிவை மார்க்கண்டேயத்தில் காண்க.