பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 06 திருக்குறட குமரேச வெண்பா முனிவரை அணுகி நுணுகிப் பயின்ருர். அந்த ஆசிரிய ருக்குப் பலவகையான பணிவிடைகளேச் செய்து நாளும் கருத்துான்றிக் கற்று வங்தார். இவருடைய வணக்கத் தையும் வழிபாடுகளேயும் உதவி கிலேகளேயும் கினேந்து அம் முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். குருவருளும் திருவ ருளும் மருவி நின்றமையால் அரிய கலே ஞானங்கள் பலவும் இவர் எளிதே கற்றுத் தெளிந்தார். அக் காலத் திலிருந்த புலமையாளருள் இவர் தலே சிறந்து விளங்கி ர்ை. இளமையில் இவருடன் பழகியிருந்த சிலர் கல்வி யை விரும்பிக் கல்லாமையால் புல்லியராய் இழிந்து நின்ருர். கற்றவர் மேதையராய் உயர்வர்; கல்லாதவர் பேதைகளாய் இழிவர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து நின்றது. விரிவைப் பாரதத்தில் காண்க. ஓதி உணர்ந்தார் உயர்வர் உணராதார் ஏதம் அடைந்தே இழிவரெனும்-நீதிமொழி கேட்டும் கலேயைக் கிளர்ந்து பயிலாமல் மாட்டுமதி ஆதல் மடம். கற்ருர் உயர்ந்து கதி கண்டார்; கல்லாதார் அற்ருர் இழிந்தார் அயல். எற்றேனும் கற்று உயர்க. 396. சீராரும் கீரருமேன் தென்முனிபால் கற்றபின்பே கூரறிவு மிக்கார் குமரேசா-நேராகத் தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனேத் துாறும் அறிவு. (6) இ-ள் குமரேசா கல்வியால் சிறந்திருந்த நக்கீரரும் அகத் தியரை அணுகி ஏன் மேலும் கற்ருர்? எனின், மணல் கேணி தொட்ட&னத்து ஊறும்; மாங் தர்க்கு அறிவு கற்ற சீனத்து ஊறும் என்க. இது, கல்வியால் அறிவு பெருகி வரும் என்கிறது. தோண்டிய அளவு மணல்கேணியில் நீர் ஊறி வரும்: