பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2109 நீர் நிலத்தில் கிலேத்திருத்தல் போல் அறிவு மனிதன் ளத்தில் மருவியுளது. எல்லேயில்லாமல் உள்ள அறி வைக் கல்வியால் வெளிசெய்து கொண்டவர் ஒளிமிகுங் தவராய் உயர்ந்து தெளிவுடன் திகழ்கின்ருர். இதயத்தில் உள்ள புதையல் நிதியை எய்தி மகிழ்க. கற்ற அனைத்து அறிவு ஊறும் என்றது கருதியுணர வந்தது. கல்வியைச் சிறிது பயின்று கின்று விடாதே; நாளும் தொடர்ந்து கருத்து ஊன்றி நன்கு கற்க வேண் டும் எனக் கலேயின் கிலேயைக் காட்டியருளிர்ை. நீர் அளவே ஆகுமாம் நீர்ஆம்பல் தான்கற்ற நூல்அளவே ஆகுமாம் நுண்ணறிவு. (மூதுரை} கல்விக்கும் அறிவுக்கும் உள்ள உற வுரிமையை ஒளவையாரும் இவ்வாறு கூறியுள்ளார். கல்விப்பயிற்சி கலமாய்ப் படிந்து வர உணர்வின் உயர்ச்சி வளமாய்: ஓங்கி எவ்வழியும் தெளிவுற வருகிறது. முயற்சி பொருளேத் தரும்; பயிற்சி அறிவை அரு ளும். தோண்டச்சுரக்கும் நீர், தீண்டச்சுரக்கும் தெளிவு: வேண்டச் சுரக்கும் விளேவு: ஈயச் சுரக்கும் சீர்: கறக்கச் சுரக்கும் பால்; கற்கச் சுரக்கும் அறிவு; கிற்கச் சுரக்கும் நெறி. உரிய கருமங்கள் அரிய பலன்களே அருளுகின்றன. கருதி வருகிற மனமே உறுதியான உணர்வாம். நூறு நாள் ஓதி ஆறு நாள் விடினும் அது மாறுபட நேரும். நாளும் பழகி வருவதே நீள நிலைத்து வருகிறது. சிலநாள் பழகின் சிலவும் பலியா; பலநாள் பழகின் பலிக்கும் என்க; விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும் விரையாது ஏற்கின் கருகாது என்க; 5 வருவதில் கருத்தினே மட்டுப் படுத்தி வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக நூலினே மீளவும் நோக்க வேண்டா சூத்திரம் பலகால் பார்க்கவே துணிக மாரிபோல் கொடுப்பினும் மந்தனே விட்டுக் 10 கூரியன் உடனே கொடுத்தும் பழகுக