பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 14 திருக்குறட் குமரேச வெண்பா கல்வியைக் கல்லாமல் கைவிட்டிருப்பது பொல்லாத புலே மூடமே. மூட இருள் கேடு மிகவுடையது. கல்வி கண்ணினும் சிறந்தது: உயிர்க்கு உற்ற துணேயானது. எல்லாமேன்மைகளேயும் ஒருங்கே அருளி இருமையும் இன்பம் தரும் இனிமையது எனக்கல்வி யை உள்ளம் உவந்து போதித்து வந்தவர் ஆதலால் அதனே இழந்து நிற்பவரை கினேங்து உளேந்துவருங்தி ர்ை. மனித சமுதாயம் மதி மாண்புகளுடன் வாழ்ந்து கதி காணவேண்டும் என்றே யாண்டும் கருனே கூர்ந்து உறுதிநலன்களே உரிமையுடன் உணர்த்தி வருகிருர், பிறந்த பிறவிக்கு உரிய பெரிய பயனே விரைந்து பெறுபவரே மேலான விவேகிகளாய் விளங்கி வருகின் றனர். பொழுதைப் பழுதே கழிப்பவர் இழுதைகளாய் இழிந்து எவ்வழியும் தாழ்ந்து படுகின்றனர். சாம் துணையும் என்றது இறங்துபடும் அளவும் கல் லாது கழிந்து கின்ற அவனது பொல்லாத புலேகிலேயை கொங்து வந்தது. சாதலேக் காட்டியது ஆதலே அறிய. இளமையில் கல்லாமல் கழிந்து கின்றவன் முதுமை யில் கற்பதால் என்ன பலன்? எனின், என்றும் எவர்க் கும் கல்வி நலமே செய்தருளுதலால் எவ்வகையிலும் எந்த கிலேயிலும் அதனேப்பயின்று கொள்வது பயனும் என்க. மூத்த கிழவனுக்கும் கல்வி வாய்த்த துனேயாம். முதியணுய் மாலேயில் சாகப் போகின்றவன் அன்று: காலேயில் ஒர் எழுத்தைப்படித்து அறிந்து செத்துப்போ லுைம் அந்த எழுத்தறிவு அழுத்தமாய் உயிரில் பதிந்து கொள்கின்றது: கொள்ளவே அவ்வுயிர் செல்லுகின்ற மறு பிறவிகளில் எல்லாம் இந்தச் சிறிய கல்வி அறிவு பெரிய வாசனையாய்ப் புகுந்து அரிய தேசு புரிந்தருளு கின்றது. கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என அடுத்த குறளில் இந்த உண்மையை உணர்த்தி யிருத்தலே ஈண்டு நுனித்து உணர்ந்து கொள்ளவேண்டும்.