பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. o கல் 2 117 கல்வி தாயைப்போல் காப்பாற்றுகிறது; தந்தை யைப்போல் எப்போதும் இதமே புரிகிறது: எந்த ங்ாட் டுக்குப்போனலும் அங்கே பந்துவைப்போல் உபசரிக்கி ற்து: இத்தகைய கல்வியை இழந்து நிற்பவன் முழு மாடே என்னும் இது இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. வீடு ஊர் நாடு என்னும் இவைகள்ால் மனிதர் இடம் பிரிந்துள்ளனர். அவரவருக்கு உரிய கிலேகளிலேயே அவர்வலிமையும் உரிமையும் பெருமையும் பெறுகின் றனர். அயலிடம் போனல் நலிவாய் மெலிவுறுகின்றனர். தன் ஊரில் அன்னம்; அயல் ஊரில் காகம். . - என்பது பழ மொழி. இடவலியின் கிலேமையை இது நயமாய் விளக்கியுளது. இந்த நிலையைக்கற்றவர்கட்ந்து கிற்கின்றனர். எக்த காடும் அவரைச் சொந்தமாகப் போற்றி மகிழ்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஆன்ம ஒளியாகிய அறிவு அவரிடம் உரிமையாக மருவி யுள்ளமையால் எவரும் அவரைத் தேவர் என ஏத்தி ஆவலுடன் மகிழ்த்து போற்றி வருகின்றனர். நாட்டை முதலில் குறித்தது அதன்பரப்பின் சிறப்பு நோக்கி. மனிதர் உரிமை பாய் ஊர்ந்து வருவது ஊர் என வந்தது. அரசர் காட்டமாய் நாடிக் கொண்டது காடு என நேர்ந்தது. விடாய் விடுதல் வீடு என கின்றது. தன்னே யுடையவனே மன்னவனிலும் மகிமைப் படுத்திக் கல்வி யாண்டும் மாண்புறுத்தி வருகிறது. இதனே உரிமையுடன் எவரும் இளமையிலேயே பயின்று வளமையாய் உயர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த கல்வியாளர் சென்ற இடங்கள் எங்கனும் மதிப்பும் மாண்பும் பெற்று மகிழ்ச்சி மீதுTர்ந்து திருவுடன் உயர்ந்து விழுமிய கிலேயில் விளங்கி வருவர். இவ்வுண்மை குமர குருபரர் பால் விளங்கி நின்றது, ச ரி த ம். இவர் பாண்டிநாட்டிலே பூரீ வைகுண்டம் என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே சண்மு க சிகா ம னி ப்.