பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 I 2 I ஏமாப்ப முன்னே. (பழமொழி. 51) ஏமாப்பச் செய்வதாம். (பழமொழி 289) ஏமாப்ப இன்துயில் துறந்து. (மதுாைக் காஞ்சி 375) என்நெஞ்சு ஏமாப்ப. (பொருநர் 98) நெஞ்சம் ஏமாந்து உவப்ப. (புறம் 198) ஏமாப்பு உற்றேன். (இராவணவதை 242) உடைமைகொண்டு ஏமாப்பார். (நீதிநெறி 63) இற்சார்வின் ஏமாந்தே ம். (நாலடி 182) அருந்த ஏமாந்த. (மணிமேகலே 18) விடிவுற்று ஏமாக்க. (பரிபாடல் 7) ஏமாப்பான் முயலும். (முத்துக்குமார-55) ஏமாப்போம்; பிணியறியோம். (தேவாரம்) ஏமாப்புச் செம்மாப்பு. (பிங்கலந்தை) இவற்றுள் ஏமாப்பு உணர்த்தி கிற்கும் பொருள் களைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். உறுதியான உள்ளத் துணிவோடு நல்ல வழியில் உவந்து களித்து உயர்ந்து வருவதே மாப்பு என்னும் குறிப்பு மொழியால் கூர்ந்து உணர வந்தது. கல்வியை விரைந்து கற்றுக் கொள்ளுங்கள்; அது உயிர்க்கு உறுதித் துணையாய் எவ்வழியும் தொட்ர்ந்து யாண்டும் இன்பம் பயந்து வரும் எனக் கலையின் கிலே பான நிலைமையையும் காப்பின் தலைமையையும் நலமா யுணர்த்தி யிருப்பது நயந்து சிந்திக்கவுரியது. மானச மருமங்கள் உரைகளில் மருவி வந்துள்ளன. பழகிய வாசனை எதுவாயினும் உள்ளத்தில் பாய்ந்து உயிருள் தோய்ந்து கொள்ளுகிறது; கொள்ளவே யாண்டும் அது தேயாமலும் யாதும் மாயாமலும் நீண்டு படர்ந்து நேரே படிந்து நிலைத்து வருகிறது. அறிவு கலம் தோய்ந்த அந்த இன்பவரவு ஆன்ம ஆதரவாய் இங்கே கன்கு தெரிய வங்தது. எடுத்துள்ள இந்தப்பிறவியில் ஒருமனிதன் படித்து 266 ---