பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 22 திருக்குறட் குமரேச வெண்பா வருகிருன்; உள்ளம் ஒர்ந்து கற்ற அந்தக் கல்வியறிவு உயிருள் சாரமாய்ச் சேர்ந்து கொள்ளுகிறது; அவ் வுணர்வின் புணர்வு மலரின் மணம்போல் மருவி கிற்ற லால் பிறவிகள் தோறும் பிரியாமல் உறவுரிமையுடன் குணகுனியாய்க் குலாவி வருகிறது. ஒரு பிறவியில் பெற்ற அறிவு ஏழு பிறவிகளிலும் விடாது தொடர்ந்து உயிருடன் கிழமையாய் ஒளிபுரிந்து வரும் என்பது எழுமை என்ற தல்ை தெரிய வங்தது. ஒருமை எழுமை என்பன தன்மைகளேக் குறியாமல் எண்ணல் அளவுகளே உணர்த்தி கின்றன. உற்றஉடலே விட்டு உயிர் பிரிந்து போனலும் அது புக்குழி எல்லாம் கற்ற அறிவும் கலந்து புகும்; உலப்பில்லாத அங்தக் கலப்பு என்றும் உறவாயுற்று வரினும் ஏழு பிறவிகளே ஊழ்முறையே எடுத்துக் காட்டி ஒரளவு கூறினர். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. (குறள் 126) ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. (குறள் 835) ஒருமையும் எழுமையும் இவ்வாறு கிழமை தோய்ந்து வளமை வாய்ந்து மரபுமுறையாய் வந்துள்ளன.

  1. *

நல்லதாயினும் தீயதாயினும் ஒருபிறவியில் செய்தது. ஏழு பிறவிகளிலும் விடாது தொடரும் என்பதை இவற். ருல் உணர்ந்து கொள்கிருேம். யாண்டும் இன்பமே வேண்டும் என்று எண்ணிவருகிற மனிதன் என்றும் குன்ருத இன்ப கிலேயமான கல்வியை உரிமையுடன் இளமையிலேயே ஒர்ந்து தேர்ந்து கொள்ளவேண்டும். தான் கற்ற என்றது மனிதன் படித்த அளவே பயன் பெறுகிருன். படியாது விடின் அது அவனது குற்றமாய் முடிகிறது. உற்ற உருவம் கற்றகலேயால் ஒளியுறுகிறது. மனிதப்பிறவி இயல்பாகவே அறிவுகலம் வாய்ந்தது. ஆதலால் உயர்வான கலேகளேக் கற்று ஒளி பெற்று உயர்ந்து வர அது மிகவும் உரிமையுற் றுள்ளது.