பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2125. இந்தச் சொல்லேக் கேட்டதும் அவன் திகைத்தான்: காரணம் தெரியாமல் விழித்தான். சிறிது நேரம் மறுகி ன்ெருன்; பின்பு பாதும் பேசாமல் விலகிப் போன்ை. கல்வி வாசனை தன் தலைமுறையிலும் இல்லாத ஒருவனுக்குக் கற்பிப்பது மிகவும் கடினம்; அவனுக்குப் படிப்பு ஏருது; அந்த மடையனுக்குச் சொல்லிக் கொடுப் பது மரண வேதனையாம் என்பதை இந்தச் சரிதம் மரும மாய் விளக்கி மானச தத்துவத்தைத் துலக்கியுளது. உரிமையுடன் ஒருவன் கல்லான் ஆயின் அது அவன் குடிக்கெல்லாம் மடமையான கொடிய சிறுமை யாம். ஒரு பிறவியில் கற்றவனே வருபிறவிகள்தோறும் கல்வியில் உறுதியாய்ப் பெருமை மிகப் பெறுகிருன். ஒருபிறவி ஓதி உணர்ந்தார் தமக்கே வருபிறவி தோறும் வலிதாம்-இருள்தீர் கலேவானர் எல்லாம் கழறினர்காண் நெஞ்சில் மலேவாகக் கொள்ளேல் மதித்து. (ஒளவையார்) ஒருமையில் கற்றது எழுமைக்கும் இனிய துனே ஆம் என்னும் கருத்தை இது திருத்தமா விளக்கி வங் துள்ளது. இருள் தீர் கலைவாணர் என்று இதில் குறித் திருப்பவரைக் கூர்ந்து சிங்தித்துத் தேர்ந்து கொள்க. கல்வி அரிய பல பெருமைகளே உதவி அதிசய இன்பங்களே அருள வல்லது. ஒரு பிறவியில் கற்றது. பல பிறவிகளுக்கும் உறுதியான பெரிய பலம்ை. போதம் பொலிங்து முன்பு ஒதியுணர்ந்து வந்தவர் பின்பு யாவும் ஒதாது தெளிவா உணர்ந்து கொள்வர். இவ் வுண்மை திருஞானசம்பந்தர்பால் தெரிய வந்தது. ச ரி த ம். இவர் சோழ நாட்டிலே சீகாழிப் பதியிலே சிவபாத இருதயர் என்னும் அந்தணரின் அருந்தவப் புதல்வராய் அவதரித்தார். தாய் பெயர் பகவதியார். இவர் தெய்வத் திருவருளினர்: சைவத் துறைகளே வளர்த்து உலக மல் களுக்கு உய்வைத் தர வங்தவர். கலே ஞானங்கள் பல