பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 29 அது ஊனைப் பெருக்கி ஈனப் படுத்தும். இது உணர்வைப் பெருக்கி ஒளிமிகச் செய்யும். அதன் நுகர்ச்சி அயலார்க்கு இகழ்ச்சியாம். இதன் நுகர்ச்சி எல்லார்க்கும் மகிழ்ச்சியாம். இவ்வுண்மைகள் ஈண்டு துண்மையா யுனா வுரியன. உள்ளே அறிவால் ஆயுங்தோறும் வெளியே வாயால் பேசும் பொழுதும் தனக்குப் பேரின்பம் சுரங்து வருகிற கல்விக்குப் பொருளும் கொடுத்துப் பூசனேகளும் புரிந்து புகழ்ந்து போற்றித் தன்னே உலகத்தார் உவந்து விழைந்து வருவதைப் புலவன் வியந்து மகிழ்ந்து கொள் கிருன். இத்தகைய மதிப்பு மாண்புகளேத் தனக்கு அருளிவரும் கல்வியை ஆர்வத்தோடு மேன்மேலும் காதலித்து அவன் உவந்து போற்றி வருகிருன். கண்டு = நேரே பார்த்து. அரிய இனிய அனுபவக் காட்சி இவ்வாறு மாட்சியாய் ஈண்டு அறிய வந்தது. காமுறுவர் = காதல் மீதுார்ந்து கல்வியைப் பேணி வருவர். இன்பம் தருவதில் அன்பு பெருகியது. ஐயம் உறுவர் என்பது ஐயுறுவர் என்ரும் போல் 1. மம் உறுவர் எ ன் ப து காமுறுவர் என கின்றது. காமம் என்னும் சொல் பெண் ஆசையையே பெரும் பாலும் குறித்து வரும். அதனே இங்கே வழங்கி யிருப் பது உளங் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது. பேரழகுடைய தன் காதலியை ஒரு காதலன் காத விப்பதினும் தனக்கு எவ்வழியும் இன்பம் பயந்து வருகிற கல்வியைக் கவிஞன் பெரிதும் காதலிப்பான் என்பது இங்கே மருமமாய்த் தெரிய வந்தது. கல்வியே கற்புடைப் பெண் டிர்அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச் - சொல்வளம் மல்லல் வெறுக்கையா மானவை மண்ணுறுத்தும் செல்வமும் உண்டு சிலர்க்கு. (நீதிநெறி 4) நல்ல உத்தமனுக்குக் கல்வியே கற்புடைய மனேவி ப் இன்ப சுகம் தரும் என இது குறித்துள்ளது. உள் 267