பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 139 அங்த வித்தை கல்லாதான் அறிவிலா மிருகசெந்து வாகும் தானே. (பர்த்துருகரி) கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. (ஒளவையார்) பொருவிலா இதிகாச புராணங்கள் தெருளு மாந்தர் சிறப்புளர் ஆகுவர்; தரும நூலும் புராணத்தின் தன்மையும் கருதி ஒர்ந்தவ ரேகலே வல்லரே. (கூர்மபுராணம்) வைப்புழிக் கோட்படா வாய்த்தியின் கேடில்லே மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார் எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற. (நாலடி 134) உன்னைப் பொருள் என் றுரைக்கும் தொறும் வளர்வாய் பொன் இனப் பொருள் என்னப் போதுமோ - கன்னமிட்டு மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள் என்ன பொருளுனைப்போல் எய்தா வே. (தமிழ்விடுதுTது) தாய் போல் இனிதோம்பும் தந்தை போல் நன்காற்றும் துாய மனே போல் சுகம்அருளும்-ஆயநலம் எல்லாம் அருளி இதமளிக்கும் கல்வியிது வல்லார்க்கு எவைதாம் வரா. (தரும தீபிகை 559) கல்வி ஒன்றே ஆருயிர்க்குப் பேரின்பம் தருவது: என்றும் அழியாத விழுமிய செல்வம், அதனே உரிமை கபாகப் பெற்றவரே இருமையும் பெருமகிமை பெறு கின்ருர் என இவை கூறியுள்ளன. குறிப்புகளேக்கூர்ந்து ஒர்க்து மெய்ப்பொருளேத் தேர்ந்து கொள்ள வேண்டும். Education leads to an immortal treasure. (Latin) என்றும் அழியாத செல்வத்தில் ஏற்றுமே ஒன்றிய கல்வி யுனே. A learned man has always wealth in himself. (Phaedrus) கற்றவன் உள்ளே கணிப்பில் பெருஞ்செல்வம் உற்றுளது என்றும் உறைந்து.