பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 145 சொல்லுக்கு உயிராயுள்ள அறிவு கல்வியால் உயர்கின்றது. ஆகவே கல்வித் தேர்ச்சி அறிவுக்கும், அறிவு சொல்லுக்கும், சொல் மனிதனது உயர்வுக்கும் முறையே மூலகாரணமாய் மருவியுள்ளது. * இங்ங்னம் எல்லாகலன்களுக்கும் ஆதி.எதுவாயுள்ள கல்வி இல்லையானல் மனிதன்மிருகமாயிழிகிருன். அவன் வாய்ச் சொல் வெறும் பிதற்றலாய்க் கழிந்து பிழைபடு கின்றது. அந்தப்பிழைபாடு கல்லாமையால் விளைந்தது; கல்லாமை என்பது நூலறிவு இல்லாமையே ஆதலால் நூல் இன்றிக் கோட்டி கொள்ளும் மடமையை ஈண்டு எடுத்துக் காட்டி இடித்து உணர்த்தி யருளினர். நூல் பல கற்றுச் சால்புடன் உயர்ந்து சான்ருேய்ை வாழுக: கல்லாது கழியின் எல்லாவழியும் இழிவே. கோட்டி கொளல்=சபையில் பேசுதல். அல்லார் முன் கோட்டி கொளல். (குறள் 720) பின்னரும் இன்னவாறு வந்துள்ளதை ஈண்டு உன்னி உணர்ந்து உரையாடுந்திறனை ஒர்ந்து தெளிக. அறிஞர் பலர் கூடியிருக்கும் கூட்டம் கோட்டி என வங்தது. உணர்வு நலன்களே உரைகளால் கொடுத்தலும் கொள்ளுதலும் செய்கிற அங்த நல்ல அவைக்குக் கோட்டி என்னும் பேர் பின்பு நாட்டப் பெற்றது. கோட்டி என உலக வழக்கிலும் உலாவி வருகிறது. பித்தனை வெறியனுக்கும் கோட்டி என்று பெயர். அறிவுகேடய்ைக் கோடி யிருப்பவன் என்னும் ஏதுவால் இது மேவியுளது. கற்றறிந்த நல்லோர் கூடியுள்ள அவையில் கல்லாதவன் புக நேரின் யாதும் பேசாமல் அமைதியாய் அடங்கி யிருக்க வேண்டும். ஏதேனும் அவன் பேச நேர்ந்தால் அது பிழைபாடுடையதாய் இழிவே அடையும்; ஆகவே இகழ்ச்சிக்கே இடமாம். புல்லா எழுத்தின் பொருளில்'வறுங்கோட்டி கல்லா ஒருவன் உர்ைப்பவும் கண்னேடி நல்லார் வருந்தியும் கேட்பாே மற்றவன் - பல்லாருள் நாணல் பரிந்து. 'நாலடி 155) 269