பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 !. ക ി ഓ 7 ഒ് ഥ 2 : 49 இழைத்து வருகிற இவரது இறுமாப்பு கிலேயை அறிந்து வாதவூரர் வாதம் புரிய இசைந்தார். சபை கூடியது. அறிஞர் பலர் குழுமியிருந்தனர். ச க ர் முதலிய எழு வரும் மதவாதிகளாய் எதிர்ந்து வாதாடலாயினர். விதி முறைகளின்றி மதி கேடராய் மத உரைகள் ஆடினர்: "உங்கள் சிவன் பித்தன்; பெண் ஆசை பிடித்தவன்; தன் உடலில் பாதியை மனேவிக்குக் கொடுத்தவன்; பிச்சை எடுத்தவன்; எலும்பு அணிந்தவன் : சுடுகாட்டில் உறைங் தவன்; நஞ்சை உண்டவன்' என இன்னவாறு மனம் போனபடி வெஞ்சொல் விளம்பினர். பொருள்கிலே உன ராமல் வெறுமொழி கூறுகின்ற இவரது மருள் நிலையை நோக்கி மணிவாசகர் புன்னகை செய்தார். கேட்டகேள் விகளுக்கெல்லாம் ஏதுக்களே எடுத்துக்காட்டி இனிது. பதில் உரைத்தார். அந்த உணர்வுரைகள் ஞானமணம் கமழ்ந்து நலம் பல சுரங்து வான ஒளிகளாய் வந்தன. தென்டால் உகந்தாடும் தில்லேச்சிற் றம்பலவன் பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் கானேடி? பெண் பால் உகந்திலைே ல் பேதாய் இருநிலத்தோர் விண்டால் போகெய்தி விடுவர் காண் சாழலோ. ( 1) கோயில் சுடுகாடு கொல் புலித்தோல நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்.தனியன் கானே உ? தாயுமிலி தந்தையிலி தான்.தனியன் ஆயிடினும் காயில் உலகனேத்தும் கற்பொடிகாண் சாழலோ. (2) அம்பர மாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்ட சதுர் எனக்கறிய இயம் பேடி? எம்பெருமான் ஏதுடுத்தங்கு ஏதுஅமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன் மையன்காண் சாழலோ. (திருவாசகம்) வாதிகள் விளுக்களுக்கு இன்னவாறு சில பொருள் கிலேகளேக் குறித்துக் காட்டி மேலும் பல உண்மைகளே வாதவூரர் உணர்த்தியருளினர். உணர்த்தவே எதிரிகள் மாறுவேறு கூருமல் மருண்டுவெருண்டு மறுகி அகன்ருர். மதகுருக்கள் என முன்னர் மதிப்புற்றிருந்தவர் அவையில் வந்து பேசிய பின்னர் பிழைகள் வெளியாக