பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2150 திருக்குறட் குமரேச வெண்பா வே அனைவரும் இவரை அவமதித்து இகழ்ந்தார். பய ளிைல்லாத இவருடைய வீண்வார்த்தைகள் நகை யாடல் களாய் வைபுரிந்து கின்றன. நூல்களே நன்கு கல்லாத வர் அறிஞர் முன் பேசவருவது பிழையாம் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து இகழ்வா ஏ.சி கின்றது. கல்வி யறிவு கனியாதான் சொல்லாடல் வில்லில் கணையாய் விழும். கல்லாதவன் வாய் இல்லாதவன். 402. காளிதா சன்பாட்டைக் கல்லாதாள் சொல்லிஏன் கோளிழிவு கொண்டாள் குமரேசா-தாளுடனே கல்லாதான் சொற்கா முறுதல் முலேயிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. (உ) இ-ள். --- m. குமரேசா காளிதாசனது கவிபைக் கல்லாதாள் விழைந்து சொல்லி ஏன் இழிந்தாள்? எனின், கல்லாதான் சொல் காமுறுதல் முலே இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்று அற்று என்க: கல்லாத பேதை பொல்லாக . . . இது. கல்வியறிவில்லாதவன் நல்ல அவை:பில் சொல்ல விழைவது முலே இரண்டும் இல்லாதவள் பெண்மையை விழைந்தது போல் இழிந்ததாம். கிந்தனையில் நீண்டு வந்துள்ள இந்தஉவமை பல சிந்தனைகளை ஈண்டு விநயமாய் விளக்க நேர்ந்தது. சொல் காமுறுதல் = சொல்லுதலே விரும்புதல். சொல் என்றது இங்கே பிரசங்கமுறையான பேச்சை. உள்ளக் கருத்தை உரையால் முறையே வெளிப் படுத்தும் திறம் நல்ல கல்வி அறிவாளர்க்கே நயமாய் அமையும். கல்வி கனிந்து வரச் சொல் உயர்ந்து வரும். தன் பேச்சை எல்லோரும் கேட்டுத் தன்னே மதிக்க வேண்டும் என்னும் ஆசை மனிதனிடம் இய ற்கையாய்