பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 156 திருக்குறட் குமரேச வெண்பா ஆனவாம் பெண்மை யுடைத்துஎனினும் பெண்நலம் பேடு கொளப்படுவ தில். (நீதிநெறி: 24) கல்லாதானேப் பேடி என்று இதுவும் இகழ்ந்து காட் டிக் கல்வியின் உண்மை கிலேகளே உணர்த்தி யுளது. தாக்கணங்கு = பேரழகுடைய பெண்தெய்வம். அங் தத் திவ்விய அழகியும் விழைந்து நோக்கும் படியான சிறந்த எழில் அமைந்திருந்தாலும் பேடியிடம் பெண் இன்பம் பெறமுடியாது. அதுபோல் கல்லாதவன் செல் வம் அழகு முதலிய வேறு பல கலங்களே எய்தியிருப்பி னும் அவனிடம் உண்மையான உணர்வின் பத்தைக் காணமுடியாது எனக் காட்டியிருக்கும் இதன் கருத்தைக் கருதிக் காணுபவர் ஒத்த கிலேயை உய்த்துணர்வர். கல்லாதான் சொல்நலம் காமுறுதல் முலேயில்லா தாள் பெண்கலம் காமுற்றது போலாம் என்பதை இவை யும் சுவையா விளக்கி கிலேமைகளைத் துலக்கி யுள்ளன. குறிப்புகள் யாவும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவுரியன. முலே இல்லாள் பெண்மை விழைவு இன்.ை (இன்னு நாற்பது 13) கபிலரும் இவ்வாறு இன்னுமையைக் கூறியுள்ளார். கலே சிறிதும் கல்லாத பேதை கற்றவன்போல் சொல்லாடவிரும்புதல், முலேசிறிதும் இல்லாத பேதைச் சிறுமி நல்ல பருவமங்கை போல் காம இன்பம் காமுற்ற படியாம். இப்படி உரை கூறுவாரும் உளர். இவ்வாறு பொருள் காணவும் இ.து இசைந்துள் ளது. பேதை என்பது ஏழு வயதுடைய சிறுமியை. தகுந்த பருவம் அடையுமுன் தருண மங்கை போல் காம இன்பத்தைக் காமுறுதல் பேதைக்கு இயலாது. உருவம் ஒத்துள்ள பேடியே பிழையாய்ப் பெண் கலம் காமுற நேரும்; ஆகவே கல்லாத மூடக்காதலுக்குப் பொல்லாத பேடிக்காதலே இங்கே கூடிக் காணவுரியது.