பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 160 திருக்குறட் குமரேச வெண்பா பெருஞ் சமர்த்தி. கவிஞர் திலகமாகிய காளிதாசரை இவள் காதலித்து வசப்படுத்திக் கொண்டாள். கலேச் சுவையில் திளேத்திருந்த அவர் இவளது காமச் சுவை யில் களித்து வந்தார். வருங்கால் போச ராசனுக்கும் காளிதாசனுக்கும் இடையே சிறிது முறிவு நேர்ந்தது. அதனால் அந்த அரசனே விட்டுப் பிரிந்து எவரும் அறி யாத தனி இடத்தே இவளோடு அவர் இனிது தங்கி யிருந்தார். போசன் சிறந்த கல்விமான் ஆதலால் இக் கவிஞர் பெருமானைப் பிரிந்திருக்க முடியாமல் பிரியம் மிகுந்து பல இடங்களுக்கும் தக்கவர்களே அனுப்பித் தேடிப் பார்த்து இவரை அழைத்து வரச் செய்தான். போனவர் அனைவரும் யாண்டும் காணுமையால் மீண்டு திரும்பி வந்தார். மன்னன் மதியூகி ஆதலால் இவரைக் கண்டு கொள்ள வேண்டி ஒர் உபயம் செய்தான். 'ஒரு பூவில் இரண்டு பூக்கள் பூத்திருக்கின்றன; இந்த அதிக யத்தை யாரேனும் கண்டது உண்டா?” என்னும் பொருளே அமைத்து ஒரு சுலோகத்தில் பாதியை முடித்து மீதியைப் பாடிக் கருதிய கருத்தைத் தெளிவு படுத்தும் கவிஞருக்குப் பதினுயிரம் டொன் பரிசில் தரப் படும் என்று ஊரில் பறையறைவித்துத் தேசம் எங்கும் அறியச் செய்தான். இந்தச் செய்தி எங்கும் பரவியது. காளிதாசர் மறைவாய்த் தங்கியிருந்த ஊரில் பெண்கள் குழுவிலும் இப் பேச்சு நிகழ்ந்தது. லீலாவதியும் அங்கி ருந்தாள்; சமுத்தியில் குறித்த பாதிப் பாட்டை மனப் பாடம் செய்து கொண்டாள்; வீட்டுக்கு வந்தாள்: கவிஞ ரிடம் உரைத்தாள். உடனே அவர் அழகாகப் பாடி முடித் தார். அந்தக் குறிப்பின் வினவும் கூறிய விடையும் பாடலில் படிந்து அயலே நயமாய் அறிய வருகின்றன. தாமாைப் பூ ஒன்றில் தண்குவளேப் பூவிரண்டு காமர் மலர்ந்திருக்கக் கண்டதுண்டோ?-மாமயிலே ! கண் டேன் இனிய கருவிழிகள் உன்முகத்தில் உண்டே அதை நீ உனர். இங்ஙனம் பாடியதைக் கேட்டதும் இம் மங்கை மகிழ்ந்தாள். பரிசில கினேந்தாள்: பதியிைரம் பொன்