பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 | 7 | தான் த லேயறிவாய்த் தழைத்து ச் செழித்து மிளிர்கின் றது. நூலோடு தோய்ந்ததே மேலாகின்றது. கல்வியின் வழியே அறிவு ஒளி வீசி விளங்குகிறது. கல்லாத போது கொழுகொம்பு இல்லாத கொடிபோல் மனித அறிவு வளர்ச்சி குன்றித் தளர்ச்சி அடைந்து மழுங்கிக் கிடக்கிறது. மழுக்கமான அது ஒரோவழி மின் மினி ப் பூச்சி போல் மினுக்கி வெளியே ஒளிவிடுமாயி னும் அதனைத் தெளிவுடையார் ஒரு பொருளாக மதியார். கன்று ஆயினும் என்றது கல்லாதவனிடம் அறிவு கல்லதாய்த் தோன்ருது என்பதைத் துலக்கி கின்றது. கழிய என்றது அந்த ஒட்பத்தின் உயர் கிலே யுனர வந்தது. கழி என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த் தித் தகுதியை நன்கு துலக்கி வரும். &T கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். (தொல்காப்பியம்) கல்வி இல் லேயேல் அங்கே நல்ல அறிவும் இல்லே பாம். கல்லாதவனது சொல்லின் புன்மையை மேலே கண்டோம்; இதில், அவனது அறிவின் தன்மையை அறிந்து உறுதி தெரிய வங்துள்ளோம். கலே பயிலாதவனிடம் நிலையான தலையறிவு நேரே தோன்ருது: ஒரு வேளே தோன்றினும் மின்னல்போல் உமின்னி விரைந்து மறைந்துபோம். தெளிந்த மேலோர்களுடைய உயர்ந்த அறிவு நலன் களே சிறந்த நூல்களாய் வந்துள்ளன. அவற்றைக் கற் றவர் நல்ல அறிவாளிகளாய்த் திகழ்கின்றனர்; அவ்வாறு கல்லாதவர் அறிவிலிகளா யிழிந்து கழிகின்றனர். உண்ணும் உணவால் உடல் உரம்பெற்று எழிலுறு கிறது: எண்ணும் கலேயால் அறிவு வளம் பெற்று ஒளி பெறுகிறது. உணவு உண்ணுத உடல்போல் கலே கல் லாத அறிவு நிலைகுலைந்து தளர்கின்றது. ஒளி ஒழியவே இழிவாகிறது. முயன்று பயின்றதே உயர்ந்து சிறந்து ஒளி மிகுந்து எவ்வழியும் தெளிவாய் விளங்குகிறது.