பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2172 திருக்குறட் குமரேச வெண்பா மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்குக் கல்வி மூல காரணமா யுள்ளது. அந்த மூல முதல் இல்லேயால்ை வறிய மூட ையிழிவுறுகிருன். உழுது பயிர் செய்யாத வன் விளே பொருள்களே இழக்கின்ருன் தொழுது கல் லாதவன் அறிவை இழந்து அவலம் அடைகிருன். கார ணேத்தைக் கைவிட்ட போதே காரியங்கள் எல்லாம் ஒழிந்து போகின்றன. போகவே சோகமாகிறது. இல்லான் புரிகின்ற ஈகைபோல் ஆகுமே கல்லான் அறிவு கழிந்தென்று-நல்லார்முன் போதித்த நீதிப் புலனறிந்து கல்வியைச் சாதித் துயர்க தனி. கல்வியைக் கல்லாதான் அறிவு, பொருள் இல்லா தான் ஈகைபோல் இருக்கும் என இ.து இகழ்ந்துள்ளது. உவமைக் குறிப்பை ஊன்றியுணர்ந்து உண்மைநிலையை ஒர்ந்து உறுதி நலனேத் தேர்ந்து கொள்ள வேண்டும். சீரிய கல்வி இல்லையேல் கூரிய அறிவும் வீரியம் இழந்து வீணே இழிந்து கழிந்து ஒழிந்து போகின்றது. அறிவுடையார் கொள்ளார் என்றது அறிவின் தகுதியை மதிக்க வுரியவர் அவரே ஆகலின் மதிப்புடை யாரை மதித்துக் காட்டிர்ை. கல்வி கதுவிய அறிவே நல்ல வழியில் தெளிந்து விதி முறையே கதி யுறுகின்றது. கல்லாத மதியைக் கலைமதியாளர் விலைமதியார்: செல்லாத காசாய்ச் சிறுமையுறுமே அன்றி யாண்டும் யாதும் அது பெருமை யுருது. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்ருர்முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால்-நல்லாய்! விமுைந் துருத உரையில்லே இல்லே கமுைந் துருத வினே. (பழமொழி 2) கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால் நல்லேம்யாம் என்ருெருவன் நன்கு மதித்தல்என்? சொல்லால் வனக்கி வெகுண்டடு கிற்பார்க்கும் சொல்லாக்கால் செல்லுவ தில். (பழமொழி 367)