பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 173 கல்லாமையின் பொல்லாமையை இவை காட்டியுள் ளன. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்ருர் முன் செல் லாது; சோர்வுபடும் என முன்துறையரையர் கல்லாத அறிவை இங்கனம் இகழ்ந்து குறித்திருக்கிரு.ர். காயர்ை வாய்மொழியை அடியொற்றி இவை வங் துள்ளன. அவ் வுண்மையை உரைகளால் உணர்ந்து இங்கு நன்கு தெளிந்து கொள்ளுகிருேம். இளமையில் கல்லாது நின்றவன் பின்பு மதிநலம் உடையய்ை அறிவாளர் முன் விளங்க முடியாது; ஒரு வேளே விழைந்து விளக்க முயன்ருலும் இழுக்கமே அடைந்து அவன் இழிந்து படுவன். பன்றிக் குருளே படாஅம் போர்த்து நிற்பினும் வென்றிக் களிறென விள்ளுப யாவ ரே? நன்றுகல் லார்கவி பாடினும் நாவல்லோர் என்றும் மதிப்ப திலே. (இன்னிசை) பன்றி சிறந்த சால்வையைப் போர்த்து கின்ருலும் யானே அதனேத் தன் இனத்துள் சேர்த்துக்கொள்ளாது: கல்லாதவன் நல்ல ஒரு கவி பாடினும் கற்றவர் அவனே மதித்துக் கொள்ளார் என இது குறித்துள்ளது. ஒத்த பிறப்பினராயினும் கற்றவர் யானைகள் போல் கம்பீரமாய் உயர்ந்து விளங்குகின்றனர். கல்லாதவர் பன்றிகளா யிழிந்து உழல்கின்றனர். எனவே கல்லாமை யால் உண்டாம் பரிதாப கிலே தெளிவாய்த் தெரிய வங் தது. கலே இழந்த போதே மனிதன் கிலே அழிந்து இழி கின்ருன். கிலேமை தெளிந்து தலைமையுற வேண்டும். வானமதி கலே மருவி வருகிற அளவு ஒளிமிகுந்து வருகின்றது: மான மதியும் கலைபெருகிய அளவே கிலே உயர்ந்து எவ்வழியும் தலைமையாய் மிளிர்கின்றது. அறிவு அதிசய ஆற்றலுடையது ஆதலால் அறியா மைகளே ஒரு பொருளாக மதியாமல் அ.து இகழ்ந்து விடுகின்றது. உரிய இனமே இனிய உறவாயுறுகிறது.