பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2174 திருக்குறட் குமரேச வெண்பா பொருள் இல்லாதவரைச் செல்வர் மதிப்பினும், கல்வி யில்லாதவரைக் கற்றவர் மதியார். இயற்கை நியதி களில் மானச மருமங்கள் மருவி யிருக்கின்றன. கற்றுயர்ந்த ஞானமதி கல்லாத புன்மதியை எற்றும் மதியா திருவானில்-உற்ற கதிரோன் எரிபொறியைக் கண்டாலும் காணு மதியில் இனிதா மதித்து. (தரும தீபிகை) சூரியன் எதிரே தீப்பொறி போலச் சீரிய கல்வியா வார் எதிரே கல்லாதான் ஒட்பம் மதிப்புருது என இது குறித்துளது. ஒளி விளக்கங்கள் உணரவங்தன. கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதிரண்டும் இல்லாதான் எக்கழுத்தம் செய்தலும்-இல்லாதான் ஒல்லாப் பொருளில்லார்க் கீத்தளியான் என்றலும் நல்லார்கள் கேட்பின் நகை. (சிறுபஞ்சமூலம், 5) செவி இல்லாதவன் அழகன் எனச் செருக்கலும், பொருள் இல்லாதவன் வள்ளல் என வருதலும், கல்வி பில்லாதவன் அறிஞன் என எழுதலும் எள்ளி இகழ்ந்து சிரிக்க நேர்கின்றன என்று இது குறித்துளது. கல்லா தான் கானும் துட்டிக் கல்சைக்கு கை:ம் எனக் காசி யாசான் இவ்வாது கூறியிருக்கிருச். கல்லார்க் கினனுய் ஒழுகலும் காழ்கொண்ட இல்லாளேக் கோலால் புடைத்தலும்-இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் இம் மூன்றும் அறியாமை யால்வரும் கேடு. (திரிகடுகம் 3) கல்லாதாரோடு கூடுவது அறியாமையால் நேரும் கேடுகளுள் முதன்மையானது என கல்லாதனுர் இவ்: வாறு குறித்திருக்கிரு.ர். கல்லாமல் கழிந்த போது மனிதன் எவ்வளவு பொல்லாதவய்ை இழிந்து போகிருன்! என்பதை மேலே வந்துள்ள குறிப்புகளெல்லாம் தெளிவா விளக்கி நிற். கின்றன. கலையறிவு கலேயவே புலே யுறுகிறது. நல்ல அறிவுடைய மனிதப் பிறப்பும் உரிய பருவத் தில் உரிமையுடன் கல்லாமையால் சிறுமையடைந்து