பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 78 திருககுறட் குமரேச வெண்பா கல்லாதவன் தன்னேப் பெரியவகை மதித்திருக்கும் மதிப்பு பொல்லாததாய்ப் புலேயுறும் என்பது இங்கே தெரிய வந்தது. மதிகேடனது மதிப்பு அதிகேடாய் யாண்டும் அவமதிப்பே அடைகிறது. தலேப்பெய்து = கற்றவரை நேரே கண்டு, கல்வி யறிவுடைய மேலோரைச் சந்தித்துப் பேச நேர்ந்தால் கல்லாதவனுடைய ம ட ைம வெளிப்பட நேரும்; நேரவே தன்னேப் பெரிய அறிவாளியாக எண் னிச் செருக்கி இறுமாந்திருந்த அந்த இருப்பெல்லாம் நெருப்பெ.திர்ப்பட்ட செத்தைகள் போல் நிலைகுலைந்து போம் ஆதலால் சொல் ஆடச் சோர்வு படும் என்ருர், வாய் திறக்து பேச நேர்ந்தால் கல்லாதவன் சொல் பிழை நிறைந்து வருதலால் அது பிழையாய்த் தெரிய வந்தது. பேசாத அளவே அவன் பெருமையுறுகிருன். தலேப் பெய்தலும், சொல் ஆடலும் இருவருக்கும் பொது. கல்லாரும் கற்ருரும் கண்டு பேசுங்கால் இரு வருடைய அறிவு கிலேகளும் அறிய வருகின்றன. உள்ளே யிருந்து துள்ளி வருகிற வார்த்தை மனிதனே வெளியே தெளிவா வார்த்துக் காட்டிவிடுகிறது. ஒரு வனது உரிய தகுதியை அறிய அவன் உ ைர .ே ய உரைகல். வாய்வழி வாய்மை வெளியாகிறது. அறிவுத் துறைகளில் நெறி முறையே பயின்று பழ இக் கற்றவன் தெளிவடைந்துள்ளான்; கல்லாதவன் அவ்வாறு பழகாதவன் ஆதலால் அந்த அறிவாளி வின விய விளுக்களுக்குப் பதில் கூற முடியாமல் தடுமாறி விழிப்பன் ; பேச நேரினும் பிழைகள் பெருகி வரும்: வரவே அவனது சிறுமை தெரியும்: தெரியவே உள்ளம் நாணி அவன் ஒதுங்கிப் போவன். உள்ளப் புன்மைகளே உரைகள் நேரே நன்கு உணர்த்தி விடுகின்றன. கல்லாதவன் பெருமை எல்லாம் கற்றவனேக் கண்ட வுடனே காணுமல் போம் என்றதனுல் இருவருடைய காட்சிகளும் மாட்சிகளும் ஒருங்கே காண வந்தன.