பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 182 திருக்குறட் குமரேச வெண்பா 406. உண்டென்னு மாத்திரமே ஓங்கினர் கீசகர் முன் கொண்டிலர்சீர் என்னே குமரேசா-மண்டி உளர்.என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். (கள்) இ-ள். குமரேசா வலியுடையராயிருந்தும் கல்லாத கீசகர் ஏன் எல்லாரும் எள்ளி இகழ இழிந்து நின்ருர்? எனின், கல்லாதவர் உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பய வாக் களர் அனேயர் என்க. கல்வி இலனேல் அவன் மனிதன் அலன் என்கிறது. கல்லாதவர் உருவமா யிருக்கிருர் என்னும் அள வினரே அன்றி யாதும் விளையாத களர்நிலம் போல் இழி நிலையரே. மான மனிதய்ை மருவியிருந்தும் ஈன நிலையில் இழிய நேர்ந்தது ஞான நலனே இழந்தமையாலே யாம், உவமானத்தால் அவமானம் அறிய வந்தது. களர் = உவர் நிலம் : பாழிடம். பயிர் பச்சைகள் யாதொன்றும் விளேயாமல் உவர் பொங்கிப் பாழாய்க் கழிந்து இழிந்து கிடக்கும் அளர் நிலம் களர் என வந்தது. களர்ப்படு கூவல். (புறம் 311.) களரியம் பறந்தலே. (புறம் 225.) வெள்ளிடைக்களர். (பெருங்கதை 1-32) இவற்றுள் களர் குறித்திருக்கும் கிலேயை அறிக. கல்லாதவரைக் களர் என்றது பயனற்ற அவரது இழிநிலே தெரிய. உவர்மண் என அவர் எண்ண கின்ருர். உள்ளே இனிமை ஒழிய வெளியே பழி விரிந்தது. அரிய கல்வி இல்லையேல் பெரிய அல்லலே. அன் என்னும் உவம உருபிடைச் சொல்லடியாகப் பிறந்த அனேயர் என்னும் குறிப்பு முற்று அவருடைய அவல நிலைகளே யெல்லாம் கருதியுணர கின்றது.