பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2183. களர் நிலத்தில் எங்த வித்தும் முளேக்காது; உணவுக் குரிய யாதொரு பொருளும் விளே யாது; ஆகவே எவரும் அதனே விரும்பமாட்டார்; உலக மக்களுக்குப் பயன் படாமல் பாழாய்க் கிடத்தலால் பயவாக் களர் என அது இழிக்கப்பட்டது. பயன் அற்றது பழியுற்றது. அறிவின் சாரம் உள்ளே இல்லாமையால் கல்லாத வன் எவர்க்கும் பயன் இல்லாதவன் ஆகிருன்; ஆகவே யாதும் பயன் இல்லாத களரோடு அவன் ஒப்ப நின்ருன். நிலத்துக்கு உரிய இனிய நீர்மை நேரே இல்லாமை யால் அது அளர் என இழிந்தது; மனிதனுக்கு உரிய அரிய மதிமாண்பு குன்றியதால் கல்லாதவன் பயனற்ற பதர் எனப் பழி படிய நேர்ந்தான். கல்வி ஆகிய ஒளி ஒழியவே மனிதனே இளிவடைந்து கொள்ளுகின்றது. களர் கழிக்கப்பட்டது: கல்லாதவன் இழிக்கப் பட் டான். உழுது பண்படுத்தி நீர் பாய்ச்சிப் பலவகைகளி லும் விளே நிலம் உரிமையோடு இனிது பேணப்படு கிறது: யாரும் யாதும் பேணுமல் களர் கிலம் வீணே இழிந்து பாழ் படிந்து கிடக்கின்றது. நெல் முதலியன விளேகின்ற நல்ல விளே நிலம் போல் கல்வியாளன் உலகிற்குப் பலவகையிலும் நல மாய்ப் பயன் படுகின்ருன்; அதல்ை அவனே எல்லாரும் புகழ்ந்து போற்றி உவந்து உபசரித்து ய | ண் டு ம் பூசித்து நேசித்து வருகின்றனர். கல்லாதவன் களச் நிலம் போல் ஒரு பயனுமின்றி வறிதே யிருத்தலால் அவனே எவரும் பேணுமல் யாதும் மதியாமல் எள்ளி இகழ்ந்து எங்கும் என்றும் தள்ளி விடுகின்றனர். அறிவின் ஒளி உள்ளே மருவி யுள்ளமையால் கற்ற வன் எவ்வழியும் திவ்விய மகிமைக ளுடையவய்ைக் சிறந்து திகழ்கின்ருன்; கல்லாதவனிடம் மடமையிருள் மண்டியிருத்தலால் யாண்டும் அவன் மடையயிைழிந்து கடையணுய்க் கழிந்து படுகின்ருன்.